புதன், 26 ஆகஸ்ட், 2020

‘இணை தேடும் இளசுகள்!’.....டாக்டர் சாலினி

டாக்டர் சாலியை அறியாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவானதே என்பது என் நம்பிக்கை. பாலுணர்வு பற்றிய மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பெரிதும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இளம் பெண் மருத்துவர் இவர். 

இவருடைய http://linguamadarasi.blogspot.com/ என்னும் தளத்தில் வாசித்ததொரு பதிவின்[ஜூன் 26, 2014] ஒரு பகுதியை[நகல்] இங்கு பகிர்கிறேன். பதிவின் தலைப்பு என்னுடையது.

ஒரு மருத்துவர், தனக்கென ஒரு தளம் தொடங்கி, மனம், உடல் தொடர்பான பயனுள்ள பதிவுகளை எழுதுதல் பெரிதும் வரவேற்கத்தக்க நற்பணியாகும். இதில் இடம்பெற்றுள்ள மொழிப் பிழைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

மருத்துவர் சாலினியின் அனுமதியின்றி இப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.
                                                           *                     *                        *
Dr. Shalini C - Family Physician - Book Appointment Online, View ...
காரணம் இயற்கையை பொருத்த வரை பருவம் அடைந்த உடனே எதிர்பாலின ஈர்ர்பு ஏற்பட்டு ஆக வேண்டும்.  ரொமாண்டிக கனவுகள் உருவாக வேண்டும். எனக்கே எனக்கென்று ஒரு ஆள் வேண்டும் என்கிற வேட்கை தலை தூக்க வேண்டும். இது பொதுவாய் பெண்களுக்கு பன்னிரெண்டில் இருந்து பதினாறூக்குள்ளூம், ஆண்களுக்கு பதினான்கில் இருந்து பதினெட்டுக்குள்ளும் நடக்கும் ஒரு பருவ மாற்றம்.  

இப்படி எதுவுமே நடக்கவில்லை என்றால், அந்த பதின்பருவத்தினருக்கு எதிர் பாலினர் மீது நாட்டமே வரவில்லை என்றால், அவர் உடலில் போதுமான ஹார்மோனே ஊரவில்லை என்று அர்த்தமாகிவிடும்.

அந்த அளவிற்கு மிக இயல்பான, நடந்தே தீர வேண்டிய மனமாற்றம் இந்த துணை தேடும் படலம்.  ஆனால் பெண்ணின் திருமண வயது 18 தானே.  ஆணின் திருமண வயது 21 தானே.  அதற்குள் எப்படி காதல், கல்யாணம் கத்திரிக்காய் எல்லாம் என்றால் அதுவும் சரிதான். 

தாகூரும், பாரதியும், பெரியாரும் ரொம்பவே போராடி தான் பெண்ணின் திருமண வயதை உயர்த்தினார்கள். இல்லை என்றால் நம்மூர் மூடநம்பிக்கைவாதிகள் எல்லாம் மனு தர்மத்தில் சொல்லபட்ட முட்டாள் தன்ங்களில் ஒன்றான கன்னிகாதானத்தை தானே பின்பற்றினார்கள்.  கன்னிகாதானம் என்பது நம்முடைய கலாச்சாரத்தின் சிறப்பல்லவா? என்று உடனே வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வராதீர்கள். கன்னிகா என்றால் பூப்படையாத 8 வயதிற்கு கீழே இருக்க கூடய பெண், வயதிற்கு வந்துவிட்டால் பெண் கன்னியாகிவிடுவாள்.  அதற்கு முன்பே, அவள் பூப்பையாத கன்னிகையாக இருக்கும் போதே, அவளை அக்மார்க் கற்போடு ஒருவனுக்கு கட்டிக்கொடுத்துவிடுவது தான் ஒரு நல்ல தகப்பனுக்கு அழகு என்று நினைத்தார்கள் அக்கால இந்தியர்கள்.  

அதற்கு பிறகு திருமணம் செய்துவைத்தால் தான் என்ன கெட்டுவிடுமாம்? என்றால், அந்த பெண்ணே கெட்டு போய்விடுவாளாம், அவள் வயதிற்கு வந்துவிட்ட பிறகு அவள் பூர்ண கற்போடு இருக்கிறாள் என்பதற்கு கேரண்டியே இல்லையாம். எதற்கு இந்த வம்பெல்லாம், வயதிற்கு வருவதற்கு முன்பே கட்டிக்கொடுத்துவிட்டால், அவள் கற்பை பற்றிய கேள்வியே வர்றாதே.

இன்றைய கணிப்பின் படி பதினாறு வயதிற்கு கீழ் இருக்கும் பெண்ணொடு உடலுறவு கொண்டால் அது ரேப் என்றாகும், தண்டனை கிடைக்கும்.  ஆனால் 1947க்கு முன்னால், இந்த கன்னிகாதான முறையே இந்திய பாரம்பரியத்தின் உச்சகட்ட எடுத்துக்காடு, இந்திய பெண்ணின் கற்பொழுக்கத்திற்கா உச்சகட்ட சான்று என்று பால்கங்காதர் திகலர் மாதிரி பெருசுகள் கூட இந்த முறைக்கு வக்காலத்து வாங்கினார்கள் என்றால் பாருங்களேன்.

எது எப்படியோ, ஆனால் காலத்தோடு நம் கட்டமைப்புகளும், கண்ணோட்டங்களும் மாறுகின்றன.  அந்த கால பெண்ணுக்கு படிப்புரிமை கிடையாது.  அவள் வெறூம் ஒரு வேலை செய்கிற, குட்டி போட்டு வளர்க்கிற, ஆணுக்கு சேவகன் செய்கிற ஒரு ஓசி மிஷின் மட்டுமே, அதனால் சட்டு புட்டுனு ஒரு மிஷினை வாங்கி போட்டோமா, வேலைய பார்த்தோமா என்று அக்கால் மனிதர்கள் நினைத்தார்கள்.  

இத்தனை சின்ன பெண், இன்னும் வளர்ச்சி முழுமை பெறாத உடம்போடு, மகபேற்றின் போது மாண்டு போனால்?  அது தான் மலிவாய் கிடைக்கும் மிஷின் ஆயிற்றே.  போனதை கழித்துக்கட்டிவிட்டு, மற்றொன்றை கட்டிக்கொண்டால் கூடவே நிறைய சீதனுமும் ஃபிரீயாய் கிடைக்குமே!  பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ரொம்பவே சவுகரியமாய் இருந்ததால், அதற்கு மேல் அது பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை.

ஆனால் தாகூரும், பாரதியும், பெரியாரும், நேருவும், பெண்ணை இப்படி வெறும் ஒரு உற்பத்தி யந்திரமாக பார்க்கவிரும்பவில்லை.  பெண்கள் கல்வி, வளர்ச்சி, அறிவு மேம்பாடு மாதிரியான விஷ்யங்களும் பெற்று இன்னும் அதிக அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்பதில் மிக முனைப்பாய் செயல்பட்டார்கள் இந்த நான்கு ஆண்களும்.  காந்தி, திலகர் மாதிரியான பெண் முன்னேற்றமா அதெல்லாம் எதுக்கு? கலாச்சாரம் கெட்டுடும் என்கிற ஆசாமிகளை மீறி, இந்த நால்வரும், ரொம்பவே போராடி பெண்களுக்கென பல உரிமைகளை பெற்று தந்தார்கள்.
=========================================================================================