புதன், 22 பிப்ரவரி, 2023

இஸ்லாமியர்கள் ஏன் பின்னோக்கிச் செலுத்தப்படுகிறார்கள்?!

‘உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூரில் உள்ள ‘தாருல் உலூம் தியோபந்த்’ என்ற இஸ்லாமிய செமினரி[இறையியல், மதம், வரலாறு தொடர்பான கல்வியை வழங்கும் ஒரு சிறப்புப் பள்ளி], தாடியை முழுவதுமாக மழித்தலை அல்லது கத்தரித்தலைச் செய்ததற்காக நான்கு மாணவர்களை வெளியேற்றியுள்ளது’ -இது நேற்றையச் செய்தி.

தாடி இல்லாத புதியவர்களும் மாணவர்களாகச் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும்  அந்த நிலையம் அறிவித்துள்ளது.

"இஸ்லாத்தில், ஆண்கள் தங்கள் தாடியை ஒரு முஷ்டி நீளத்திற்கு வைத்திருக்க வேண்டும். அதை ஒரு முஷ்டி அளவுக்குக் கீழே வெட்டுவதும் மொட்டையடிப்பதும் தடைசெய்யப்பட்டவை[ஹராம்] என்பதோடு அவை மாபெரும் பாவச் செயலுமாகும்[அறுவை செய்ய நேரும்போது இதற்கு விதிவிலக்கு உண்டா?!] என்று கல்வித் துறைத் தலைவர் ’மௌலானா ஹுசைன் அகமது’ கூறினார்” என்பதும் அச்செய்தியின் உள்ளடக்கம் ஆகும்.

இந்த நடவடிக்கையை, தியோபந்த் நகரத்தில் உள்ள ஜாமியா ஷைகுல் ஹிந்தின் மௌலானா முஃப்தி ஆசாத் காஸ்மி ஆதரித்துள்ளாராம். freshers-without-beard/ar-AA17KqNx?ocid=msedgdhp&pc=U531&cvid=a88858d56b814a428127c28d38c9d30e

தாடியை அகற்றுவது பாவச் செயல் என்கிறார் இவர். இஸ்லாமியர்களிலேயே இதை மறுப்பவர்களும் உளர்.

குரானில் 114 அத்தியாயங்கள் 6346 வசனங்கள் உள்ளன. தாடி வைக்க வேண்டும் மீசையைச் சிரைக்க வேண்டும் என்று ஓரு வசனத்திலும் இல்லை.

இஸ்லாமிற்குக் குரான் மட்டுமே சட்டப் புத்தகம் - மற்றவை எல்லாம் மனிதனால் எழுதப்பட்டவை. அதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார் ஒரு இஸ்லாமியர்{Syed Siraj [quora]}.

அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் – பெண்களும், ஆண்மையிலும் – பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. தாடி வைக்க, பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத்தான் செலவு ஏற்படும்.https://www.onlinepj.in/index.php/books/islamic-tamil-books/arthamulla_kelvikal

இது போன்ற வாதங்கள் மிக மேம்போக்கானவை.

இஸ்லாம் ஒரு மதமோ மார்க்கமோ, மனித மனங்களை நன்னெறியில் செலுத்துவதுதான் அதன் நோக்கமாக இருக்குமே[வேண்டும்] தவிர, உடல் பராமரிப்புக்கு அது முக்கியத்துவம் தராது என்பதே நம் நம்பிக்கை.

வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருக்க, எதார்த்த நிலை என்று பார்க்கும்போது, இந்தியாவைப் பொருத்தவரை தாடி வளர்க்கும் இஸ்லாமியர் எண்ணிக்கை குறைந்துகொண்டுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை[மற்ற மதத்தவரும் வளர்ப்பது முக்கியக் காரணமோ?].

‘சீனாவில், புதிய சட்டத்தின்படி, உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது ஆகியவற்றின் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது -bbc’ -இம்மாதிரியான தகவல்களை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லையா?

தாடிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துகொண்டிருக்கும் நிலையில் தாடி வளர்க்கும் வழக்கத்தைக் கட்டிக்காப்பதற்கு இஸ்லாம் மார்க்கத் தலைவர்கள் ஏன் இத்தனைச் சிரமப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.

மனத்தளவில் ஒரு இஸ்லாமியர் 100% இஸ்லாமியராகவே இருக்கட்டும். பொதுவிடங்களில் தோற்றத்தால் தாங்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள் என்று காட்டிக்கொள்வது தேவைதானா?

ஏற்கனவே, பொதுமக்களுடனான் இஸ்லாமியர் உறவைத் துண்டித்துவிடப் படாதபாடு படும் இந்துத்துவர்களை இது உற்சாகப்படுத்துவதாக அமையும் என்பதை மார்க்கத்தின் தலைவர்கள் உணராமல் இருப்பது ஏனென்று புரியவில்லை.

எது எப்படியோ, பிற மக்களைப் போலவே இஸ்லாமிய மக்களும் வளம் செறிந்த நல்வாழ்வை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டியவர்களே. அவர்களைப் பின்னோக்கிச் செலுத்தும் தவற்றைச் செய்யாமலிருப்பது சம்பந்தப்பட்ட தலைவர்களின் கடமை!
[Islamic seminary expels 4 students for shaving beard, says no admission for freshers without beard© Provided by The Indian Express]
==============================================================================