எனது படம்
கடவுளின் இருப்பு, மூடநம்பிக்கைகள், சமூக அவலங்கள் போன்றவை குறித்த என் எண்ணங்கள் உங்களின் சிந்தனையைத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். அறிவியல் & மருத்துவம் பற்றி நான் அளிக்கும் தகவல்களைச் சரிபார்ப்பது உங்கள் கடமை.

திங்கள், 4 செப்டம்பர், 2023

உதயநிதியின் தலைக்கு விலை வைத்துள்ள ஒரு கழிசடைக் காவி!!!

 

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்தவன் சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா. காவி உடுத்த ஒரு காட்டுமிராண்டி.

சனாதனம் குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவருபவருக்கு 10 கோடி ரூபாய் பரிசளிப்பதாக இவன் அறிவித்துள்ளான் என்பது பல ஊடகங்களிலும் வெளியாகியுள்ள செய்தி.


முன்னதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதை எரித்திருக்கிறான் இந்தக் கழிசடை.


சனாதனத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதன் பயன் இவனைப் போன்ற காட்டுமிராண்டிகளை வளர்த்துவிடுவதுதான் என்பதை, அதை ஆதரிப்போர் இப்போதாவது புரிந்துகொள்ளுதல் வேண்டும்.


ஏற்கனவே, மூடநம்பிக்கைகளை வளர்த்து முட்டாள்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடம் ஏறியவர்களால்தான் இம்மாதிரியான மழுங்கல் மூளையர்கள் பலர் இந்த மண்ணில் உலா வந்துகொண்டிருக்கிறார்கள்.


சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடையப்போவதாக அறிவித்துவிட்டுப் பின்வாங்கியவன் இந்தப் பீச்சாண்டி என்கிறார்கள்.


உண்மையிலேயே ஜலசமாதி அடைய வேண்டியவன்தான் இந்த  அழுக்குச் சாமியார்.


இவன் ஜலசமாதி ஆகும் அற்புதக் காட்சியைப் பார்க்க நம் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் ஆசைப்படுகிறார்கள் என்பது சற்று முன்னரான தொ.கா. செய்தி.


இவனை இங்கு அழைத்துவந்து, இவன் ஜலசமாதி ஆவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்று நம் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையார் அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்!


https://www.dailythanthi.com/News/India/paramahamsa-acharya-rs-10-crore-prize-for-beheading-udhayanidhi-stalin-1045278?infinitescroll=1