வியாழன், 2 மே, 2024

‘பாஜக’ செத்துக்கொண்டிருக்க மோடி அழுதுகொண்டிருக்கிறார்!!!

மதாபாத்தில்[குஜராத்] நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ''பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் செத்துக் கொண்டிருக்கிறது[Dying], அங்கே பாகிஸ்தான் அழுதுகொண்டிருக்கிறது[Crying]. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் ராகுலைப் பிரதமராக்கத் துடிக்கின்றனர்'' என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்[சில மணி நேரங்களுக்கு முன்பு> தினமலர்].

பரப்புரையில், ‘..... பாகிஸ்தான் தலைவர்கள் ராகுலைப் பிரதமராக்கத் துடிக்கிறார்கள்’, அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள்[Crying] என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, அவர்கள் நம் பரம்பரை எதிரிகள் என்பதால். அது நமக்கு ஒரு பொருட்டல்ல.

‘காங்கிரஸ் செத்துக்கொண்டிருக்கிறது[காணொலி காண்க] என்று தோல்வி பயத்தில் தன் உள்ளக் குமுறலைக் கக்கியிருப்பதுதான் மோடி மீதான நமக்குள்ள வெறுப்பை அதிகரித்திருக்கிறது.

காங்கிரஸ் 100% தோல்வியைச் சந்திக்கக் காத்திருக்கிறது என்று பேசியிருக்கலாம். ‘செத்துக்கொண்டிருக்கிறது’ என்பது பிரதமராகவும் ஒரு பெரிய கட்சியின் அதிபதியாகவும் இருப்பவரின் மதிப்பைத் தாழ்த்தும் செயலாகும்.

குறைந்தபட்ச நாகரிகம்கூடத் தெரியாதவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்ததும் இருந்துகொண்டிருப்பதும் மிகப் பெரிய அவமானம்.

தொடர்ந்து இவ்வாறெல்லாம் அநாகரிகமாக இவர் பேசுவாரேயானால், தேர்தலில் தோல்வியைச் சந்திப்பது மட்டுமல்ல, காலப்போக்கில் இவர் கட்சி காணாமல் போகும் என்பது உறுதி.

‘காணாமல் போகும்’ என்று நாம் குறிப்பிட்டது நம் இனப் பண்பாடு கருதி.

நாகரிகம், பண்பாடு என்றிவற்றைப் புறம் தள்ளி, மோடியின் அநாகரிக உரைக்கு நாம் தரும் பதிலடி.....

“பாஜக செத்துக்கொண்டிருக்கிறது! மோடி அழுதுகொண்டிருக்கிறார்” என்பதே!

மோடி மீண்டும் இந்த நாட்டின் பிரதமராக[நீடிக்க] ஆசைப்பட்டால், அதற்குரிய தகுதியை அவர்  வளர்த்துக்கொள்ள மிக மிக மிகப் பல ஆண்டுகள் ஆகலாம்!

காணொலி:

                                        *   *   *   *   *

https://www.dinamalar.com/news/india-tamil-news/congress-is-dying-pakistan-is-crying-pm-modi-criticism--/3614262