வெள்ளி, 20 செப்டம்பர், 2024

‘இது ஸ்ரீரங்கநாதர் சாமி கழிப்பறை’!!!

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலைச் சுற்றி, 7 பிரகாரங்கள்[தெருக்கள்] உள்ளன.

விழாக் காலங்களில் ரங்கநாத சாமி அவர்கள் நகர்வலம்[தெருக்களில்] வருவது வழக்கம்.

இந்த நகர்வலத்துக்கு இடையூறு செய்யும் வகையில் மாநராட்சிக்காரர்கள் இரண்டு தெருக்களில் பொது மக்கள் பயன்பாட்டிற்காகக் கழிப்பறைகள் கட்டுகிறார்கள். 

இந்தக் கழிப்பறைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும் என்று  கட்டுமானத்திற்குத் தடை விதிக்கும்படி ‘நகர் நலக் கூட்டமைப்பினர்’ வழக்குத் தொடுக்க, கழிவறை கட்டுவற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்[செய்தி: தினமணி].

கழிப்பறைகள் தெருவோரங்களில் கட்டப்படுகின்றன. ரங்கநாதரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கானவை அவை.

கழிப்பறைகள் இல்லாவிட்டால் அவர்கள் ‘ஒன்னுக்கு ரெண்டுக்கு’ப் போவது எங்கே? 

கோயில் வளாகத்தைச்[சுற்றுச் சுவர் ஓரங்களில்] சுற்றிலும், தெருவோரச் சந்துபொந்துகளிலும் கழித்துவைத்தால், சப்பரங்களில் சாமியைச் சுமப்பவர்களும் சூழ்ந்து செல்லுபவர்களும் மட்டுமல்ல, ஸ்ரீரங்கநாதரே மூக்கைப் பொத்திக்கொள்ள நேரிடும்.

இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத குறுமதியாளர்களா நகர் நலக் கூட்டமைப்பினர்?

வழக்குத் தொடுத்த இவர்களைக் கண்டிக்காமல் இவர்களுக்குச் சாதகமாக உயர் நீதிமன்றம் தடை விதித்தது நாட்டு மக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிகழ்வாகும்.

இது விசயத்தில் ஸ்ரீரங்கம் மாநகராட்சியாளருக்கு நாம் வழங்கும் பரிந்துரை.....

கழிவறைக்கான கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில், ‘இது ஸ்ரீரங்கநாதர் கழிப்பறை’[இது ரங்கநாதருக்கானது. மனிஷாள் நுழைய அனுமதி இல்லை] என்று பெரிதாகப் பெயர்ப்பலகை வையுங்கள்.

வைத்தால்.....

கட்டுமானப் பணியைத் தடுக்கவோ, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கவோ எவனுக்கும் துணிச்சல் வராது!

                                    *   *   *   *   *

https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2024/Sep/19/interim-ban-on-construction-of-toilets-on-srirangam-temple-uthra-streets