என்றெண்ணல் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி கோயிலை மீண்டும் புனிதப்படுத்த வேண்டும் என்று தொடர் விரதம் இருக்கிறார். திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் சமயலறை உள்ளிட்டப் பகுதிகளில் ஹோமம் வளர்த்து சாந்தி பூஜை செய்தது. அதைத் தொடர்ந்து ஆந்திராவின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், திருப்பதி வெங்கடாசலபதியைச் சாந்தப்படுத்தப் பாத யாத்திரை செய்யவிருக்கிறார்கள்’[www.vikatan.com/].
கலப்படம் செய்யப்பட்டபோது வெ.பதி ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது தியானத்தில் இருந்தாரா? இல்லை என்றால் கலப்படம் செய்யும்போதே அதைச் செய்தவனைத் தன்னிடமுள்ள சக்கராயுதத்தால்[பெருமாள், ஏழுமலையான், கிருஷ்ணப் பரமார்த்தமா, திருமால் என்று பல பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்] கழுத்தை அறுத்துப் பிணமாக்கியிருக்கலாம். குறைந்தபட்சம், கலப்படம் செய்தவனைத் திருத்தியிருக்கலாம்.
எதுவும் செய்யாமல் இருந்ததற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம்.
பூஜை செய்கிறார்களாம் பூஜை.
ஒரு நபர் உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதம் இருந்தால் கோயில் புனிதம் அடைந்துவிடுமா? உண்ணாநோன்புக்கான உண்மைக் காரணம்தான் என்ன? விளக்கம் தருவாரா அவர்?
மண்டையில் உள்ள மூளையில் 001%கூடப் பயன்படுத்தாத இவர்களை மரமண்டையர் என்பதா, களிமண் மண்டையர்கள் என்று சாடுவதா?
இன்னும் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் உள்ளன.
ஆறறிவு இருந்தும் முழுக்க முழுக்கக் காட்டுமிராண்டிகளாகவே வாழும் இவர்களிடம் கேட்பதால் அணுவளவும் பயன் இல்லை என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன.
* * * * *