துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காகவும், கோரிக்கைகள் நிறைவேறுவதற்காகவும் நம்மில் பலரும்[கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்] சாமி கும்பிடுகிறார்கள்.
வீட்டிலிருந்தே மனத்தளவில் தத்தமக்கான சாமிகளை வழிபடுவதே போதுமானது. பொழுது போகாவிட்டால் கோயிலுக்குச் சென்று, அலங்கரிங்கப்பட்ட சாமி சிலைகளைக் கண் குளிரக் கண்டு கைகூப்பி வணங்கிவிட்டு வரலாம்[கோயில் & சாமி சிலைகள் பராமரிப்புக்குத் தேவையான ஆட்கள் இருந்தாலே போதும்; அர்ச்சகர்கள் எனப்படும் பூஜாரிகள் தேவையில்லை].
சாமிக்கு விருப்பமானதென்று[சாப்பிடுவதில்லை; உணவிலுள்ள சத்தினை உறிஞ்சுவதும் இல்லை]தேங்காய், பழம், பொங்கல், வடை, சுண்டல் என்று சுவையான பண்டங்கள் வைத்து, மணியடித்துத் தீபாராதனை காட்டிச் செய்யும் பூஜை தேவையற்றது; பயனற்றது.
பூஜை செய்வது வழிபடும் சாமிக்கு மரியாதை செலுத்தவும், சாமிகளுக்கு உள்ள சக்தியுடன் பக்தர்களின் மனம், புத்தி, புலன்கள், ஆன்மா முதலானவற்றை இணைக்கவும், அதிகாலையில் உறங்கிக்கொண்டிருக்கும்[துயில்] அதுகளை எழுப்பவதற்கும் என்று காரணங்களை அடுக்குகிறது ‘கிரியசூத்திரம்’ என்னும் நூல்[2600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாம்!!!].
மேற்கண்ட காரணங்கள் முற்றிலும் பகுத்தறிவுக்கு முரணானவை.
சக்தி வடிவமானதும் விருப்பு வெறுப்பு அற்றதுமான சாமிக்கு அற்ப மனிதர்கள் பூஜை செய்து மரியாதை செலுத்துவது தேவையற்றது. “மரியாதை எனக்குத் தேவை. நாள் தவறாமல் பூஜாரிகளை வைத்து இதைச் செய்யுங்கள்” என்று சாமி[ஆயிரக்கணக்கான சாமிகளில் ஏதோ ஒன்றோ பலவோ] என்று கட்டளை பிறப்பித்ததா?
எப்போது? எப்படி? எவரிடம்?
மனம் முதலானவற்றை இணைக்கிறதாம் பூஜை. அதென்ன இணைப்பு? இணைப்பில் சாமியின் பங்கு என்ன? பயன் என்ன? சாமியுடன் இறண்டறக் கலந்து கால வரையறையின்றி என்றென்றும் பேரானந்தத்தில் மூழ்கிக் கிடப்பதா? அது சாத்தியமே இல்லை.
ஒரு நாளில் ஆறு முறை பூஜை செய்வதும்[ஆறு காலப் பூஜை > தில்லைத் தீட்சிதன்களை நினைவுகூர்க] வழக்கத்தில் உள்ளது. அதிகாலையில் செய்யும் பூஜை சாமிகளை எழுப்புவதற்காகவாம். எழுப்பாவிட்டால் யுகம் யுகமாகக் குறட்டைவிட்டுத்[ஹி... ஹி... ஹி!!!] தூங்கிகொண்டே இருக்குமா?
சாமி[கள்] உறங்குவது[இதற்கு நம்ப இயலாத விளக்கங்கள் தருவாருண்டு] உண்டு என்று சொல்லி அதை எழுப்பப் பூஜை செய்பவர்களுக்கு ஒரு ‘மில்லி மீட்டர்’ அளவிலான சிறு மூளைகூட இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஆக.....
வேறு வேலையே இல்லாத வெட்டி மனிதர்களின் கண்டுபிடிப்புத்தான் இந்த ஆறுகாலப் பூஜை, அர்த்த ராத்திரிப் பூஜை, அதிகாலைப் பூஜை எல்லாம்!