எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 20 ஜனவரி, 2025

கும்பமேளா தீ விபத்து... கங்கா தேவிக்கு ரொம்பத்தான் குறும்பு!!

த்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலிண்டர் வெடித்ததால், கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்களில் 20க்கும் மேற்பட்டவை தீப் பற்றி எரிந்தன என்பது செய்தி.

கா கும்பமேளா எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “மகா கும்பமேளாவில் தீ விபத்து ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் கங்கா தேவியிடம் பிரார்த்தனை செய்கிறோம்” என கூறப்பட்டுள்ளது[hindutamil.in].

கங்கா தேவி ஒரு பெண் தெய்வம் என்பதால் தீ விபத்து ஏற்படாமலே தடுத்திருக்க முடியும். தடுக்காததால், இந்த விபத்துக்கான காரணக்கர்த்தாவே அந்தத் தேவியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

புண்ணியம் சேர்த்துச் சுவர்க்கம் புகும் ஆசையில் கங்கையில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்களை, பதறித் துடித்து ஓடவிட்டவரே அவர்தான் என்று சொல்லத் தோன்றுகிறது[காணொலியில் இடம்பெற்றுள்ள ‘தீ விபத்தால் அலறி ஓடிய லட்சக்கணக்கான பக்தர்கள்’ என்னும் வாசகம் கவனிக்கத்தக்கது].

உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாததால், பக்தக்கோடிகள் அஞ்சி அலறி ஓடுகிற அசாதாரணக் காட்சியைக் கண்டு ரசிப்பதற்காகவே அம்மை இந்தத் தீ விபத்தை நிகழ்த்தினார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

கங்கா தேவிக்கு ரொம்பத்தான் குறும்பு!

கும்பமேளா நிகழும் இடத்தில், சிவபெருமான், விஷ்ணு பகவான், லட்சுமி தேவி ஆகிய கடவுள்களுக்கும் கோயில்கள் உள்ளனவாம்.

தீ விபத்து நிகழ்ந்தபோது அவர்களெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்னும் கேள்வி எழுகிறது.

வேறென்ன, பக்தர்கள் அடித்துப்பிடித்து ஓடும் அலங்கோலக் காட்சியை அவர்களும் பார்த்து ரசித்துக் குதூகளித்திருப்பார்கள். ஹி... ஹி... ஹி!!!

* * * * *

https://www.hindutamil.in/news/india/1347586-fire-breaks-out-at-maha-kumbh-mela-1.html