எனது படம்
கடவுளின் இருப்பு, மூடநம்பிக்கைகள், சமூக அவலங்கள் போன்றவை குறித்த என் எண்ணங்கள் எவ்வகையிலேனும் உங்களுக்குப் பயன்படுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். அறிவியல் & மருத்துவம் பற்றி நான் அளிக்கும் தகவல்களைச் சரிபார்ப்பது உங்கள் கடமை.

திங்கள், 19 மே, 2025

உடம்புக்குள் ‘உயிர்’ இருப்பது உண்மையா?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி, உயிர்வாயு[ஆக்சிஜன்] கலந்து, வேதியியல் மாற்றங்களைப் பெறுவதன் மூலம் சக்தியாக மாறுகிறது. அச்சக்தி செல்களிலும் ஊடுருவுகிறது. செல்கள் உரிய சக்தியைப் பெற்ற நிலையில் உடம்பு இயங்குகிறது. இந்தச் சக்தியை நம் உடம்பானது முற்றிலுமாக இழக்கும்போது அதன் இயக்கம் நின்றுபோகிறது; பின்னர் அழிந்துபோகிறது.

இவ்வகையில், உடம்பின் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைவது ‘சக்தியே’ என்பது அறியப்படுகிறது. இந்தச் சக்தியே ‘உயிர்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆக, உடம்புக்குள் பரவிக்கிடப்பது ‘சக்தி’ மட்டுமே; உயிர் என்று கூடுதலாக ஒன்று இல்லை[இந்தச் சக்தியை, ‘உயிர்ச் சக்தி’ என்றும் அழைத்துக்கொள்ளலாம்]. 

இது, இன்றைய அறிவியல் வழங்குகிற உடம்பின் இயக்கம் பற்றிய செய்தியாகும்.

எனவே, இனியேனும்..... 

நம் உடம்புக்குள் ஏதோ[உயிர், மனம்(ஆய்வுக்குரியது), ஆன்மா, ஆவி] “இருக்கு... இருக்கு... இருக்கு” என்று கிறுக்குத்தனமாய் உளறிக்கொண்டிருக்காமல், இருக்கும்வரை பிற மனிதர்கள் மீதும் ஏனைய உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்திட முயற்சி செய்வோம்.

*   *   *   *   *
***எங்கோ எப்போதோ படித்ததை நினைவுகூர்ந்து பதிவு செய்ததன் மறுபதிப்பு இது.