எனது படம்
கடவுளின் இருப்பு, மூடநம்பிக்கைகள், சமூக அவலங்கள் போன்றவை குறித்த என் எண்ணங்கள் எவ்வகையிலேனும் உங்களுக்குப் பயன்படுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். அறிவியல் & மருத்துவம் பற்றி நான் அளிக்கும் தகவல்களைச் சரிபார்ப்பது உங்கள் கடமை.

செவ்வாய், 13 மே, 2025

பதுங்கிப் பதுங்கிப் பாய்கிறானா நம் எதிரி பாகிஸ்தானி?!

பாகிஸ்தானின் முதுகெலும்பை முறித்துவிட்டதாக நம் பெருமதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள், நேற்று இரவு[08.00 மணி] நம் நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது பெருமிதப்பட்டார்.

பஞ்சாபிலுள்ள ஆதாம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்று வீரர்களிடையே மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்; "இனி ஒரு முறை பாகிஸ்தான் வாலாட்டினால் அதை ஒட்ட நறுக்குவேன்” என்பது போல் எச்சரித்தார்.

பதற்றத்திலிருந்த நம் மக்களும் நிம்மதிப் பெருமூச்செறிந்தார்கள்.

‘யூடியூப்’ தளத்தில் உலா வந்தபோது கீழ்க்காணும் காணொலி கண்ணில் பட்டு அடியேனைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 


***செய்தி[பாகிஸ்தானின் அத்துமீறல்] பொய்யானதாக இருந்தால் நல்லது என்பது நம் உள்மன ஆசை.