//தூத்துக்குடி விமான நிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை[terminal]ப் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் & சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.
இதன் பொருட்டு இன்று இரவே மாலத்தீவிலிருந்து[5 நாள் சுற்றுலா முடிந்து] விமானம் மூலம் தமிழ்நாடு வருகிறார் ‘தர்மச் சக்கரவர்த்தி’ மோடி.
மோடியின் பயணங்கள், அயல்நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கானவை[அண்மையில் பாகிஸ்தானுடனான போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவை ஆதரித்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது! ஹி... ஹி...ஹி!!!].
அவரின் தூ.குடி வருகை, அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் உலகச் சுற்றுப் பயணத்தைத் தாமதப்படுத்தும் என்பது உறுதி[2025 நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாகவே அவர் தன் 5 நாள் சுற்றுலாவை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது].
எனவே, அடுத்த சுற்றுலாவுக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கும், அதைத் தொடங்குவதற்கும் வசதியாக, தூத்துக்குடிக்கான பயணத்தை ரத்து செய்து, முனையத் திறப்பு நிகழ்வைக் காணொலி[நேரலை] வாயிலாக[குறைந்த அவகாசத்தில்] நம் தர்மச் சக்கரவர்த்தி மோடி அவர்கள் செய்துமுடிக்கலாம் என்பது நம் எண்ணம்; பரிந்துரையும்கூட.
* * * * *

