எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

இந்தியாவை உடைத்துச் சிதறடிக்கும் ஒன்றிய அரசின் அதிகார வெறி!!!

மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் & ஜனாதிபதிக்குக் காலக்கெடு நிர்ணயித்துச் சுப்ரீம் கோர்ட்டு அளித்திருந்த தீர்ப்பு தொடர்பாக, ஒன்றிய அரசு முன்வைத்த வாதங்களில் கீழ்க்காண்பதும் ஒன்று; மிக மிக முக்கியமானதும்கூட.

//அரசுகளுக்கு[மாநில அரசுகளுக்கு> அடிமை அரசுகளுக்கு என்று குறிப்பிட்டிருக்கலாம்] அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது//*

சுற்றி வளைத்து இந்த வாதத்தின் மூலம் ஒன்றிய அரசு கூறுவது என்னவென்றால்.....


நாட்டை ஆளுவதற்கான அத்தனை உரிமைகளும் அதிகாரங்களும் ஒன்றிய அரசுக்கே[நடுவணரசு]. அதாவது, இந்திக்காரன்களுக்கே[இந்தியைத் தய்மொழியாகக்கொண்டவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அதை முழுமையாக ஆதரிப்பவர்களும்> மோடி& அமித்ஷா வகையறா] என்பதுதான்.

மாநிலங்களை[குறிப்பாக, இந்தியல்லாத மொழிகளைத் தாய்மொழியாகக்கொண்ட மக்கள் வாழும் இடங்கள்]  ஆளும் அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை என்கிற வடபுல அதிகார வர்க்கத்திற்கு நாம் சொல்ல விரும்புவது.....

“ஏற்கனவே வகுக்கப்பட்டவையும், புதியனவாக நீங்கள் வகுக்கும் சட்டங்களும் இந்த நாடு உடைந்து சிதறிவிடாமல், அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக வாழ்வதற்கானவையாக இருத்தல் வேண்டுமே அல்லாமல், பிற மொழிக்காரர்களை இந்திக்காரன்[+இந்திக்காரர்களாகவே தங்களை உருமாற்றிக்கொண்டவர்கள்> அங்கிங்கு எனாதபடி எங்கெங்கெல்லாமோ இந்தியைத் திணித்துவிட்டார்கள்] அடக்கி ஆளுவதற்காக அல்ல.

இந்தி அல்லாத பிறமொழிக்காரர்களாகிய நாங்கள் இந்த நாட்டின் நியாயமான சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ நினைக்கும் குடிமக்களே தவிர, உங்களின் நிரந்தர அடிமைகள் அல்ல.”

                                              *   *   *   *   *