“இந்தியாவின் ‘சிறிய சிப்’[‘குறைக்கடத்திச் சிப்’ என்பது சிலிக்கான் போன்ற குறைக்கடத்திப் பொருட்களில், டிரான்சிஸ்டர்கள், மின்தேக்கிகள் போன்ற பல மின்னணுக் கூறுகளைக் கொண்ட, ஒரு மிகச் சிறிய சுற்று ஆகும். இது கடத்திகள் மற்றும் காப்புப் பொருள்களுக்கு இடையில் மின் கடத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது, இதனால் மின்சாரத்தைத் தேவைப்படும்போது கடத்தவும், தடுத்து நிறுத்தவும் முடியும். கணினிகள், ஸ்மார்ட்போன்கள், வாகனங்கள் போன்ற அனைத்து மின்னணுச் சாதனங்களுக்கும் இது அடிப்படையாக உள்ளது> google search]. உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. உலகத்தின் நம்பிக்கை இதில் உள்ளது என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று மோடி பேசியிருக்கிறார்{‘சன்’ தொ.கா.> காலை 07.15[03.09.2025] செய்தி+*}.
நம் ‘சிறிய சிப்’ உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது இருக்கட்டும்[உலகின் நலன் பற்றிப் பேசியிருப்பது உங்களின் ‘பெரிய’ மனதை அடையாளப்படுத்தியிருக்கிறது], இந்தியாவில் இது எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை முதலில் சொல்லுங்கள்.
‘2047இல் இந்தியா, 3047இல் இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா’ என்றெல்லாம் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிராமல் அறிவியல் கண்டுபிடிப்புப் பற்றியத் தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
* * * * *

