பீகாரில் மாநிலச் சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
“பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி[(NDA) ஆட்சியைத் தக்கவைத்தால், உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றியது போல, மொஹியுதீன் நகரை மோகன் நகராகவும், ஐதராபாத்தை பாக்யாநகராகவும் மாற்றுவோம்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்[சில நாட்களுக்கு முன்பு] என்பது செய்தி*
ஒரு யோகிக்குரிய மனப்பக்குவம் இந்த ஆளுக்கு இல்லை என்பதைப் பலரும் அறியச் செய்கிறது இந்தச் சங்கி கக்கியுள்ள மேற்கண்ட நச்சு உரை.
இஸ்லாம் மதப் பெயர்களை மாற்றுகிற இவர்கள், முன்பு இந்துவாக இருந்து இஸ்லாமியராக மாறிய அத்தனைப் பேரையும் அடையாளம் கண்டு மீண்டும் இந்துக்களாக மாற்றுவார்கள் போலும்.
அனைவரையும் மனிதர்களாக மதித்து வாழும் தமிழர் போன்ற இனத்தவரையும் இந்து வெறியர்களாக மாற்றுவதே இவர்களின் அடுத்த இலக்காக இருக்கக்கூடும்.
நிம்மதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கும் அபாயகரமான மனிதர்கள் இவர்கள் என்பதை நம் மக்கள் புரிந்துகொள்வது நல்லது.

