சீமான் | பெரியார் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீமான் | பெரியார் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 பிப்ரவரி, 2025

இந்தப் பதிவு சீமான் என்னும் 'செமி’ சங்கிக்குச் சமர்ப்பணம்!!!

ரோடு இடைத் தேர்தலுக்கு மிகச் சில நாட்களே உள்ள நிலையில், இதைப் படித்த பிறகேனும் பெரியார் எதிர்ப்புப் போதையிலிருந்து விடுபட்டு, நிதானப் புத்தியுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவான் சீமான் என்னும் நப்பாசையில் பகிரப்படுகிறது இப்பதிவு[நன்றி: ராம், ரஹீம், ராபர்ட்> Quora].

‘பெரியாருக்குக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?’ -அவசியம் பதில் அறிய வேண்டிய கேள்வி இது.

//சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளைக் களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், அவர் போராட்டங்களை மேற்கொண்டபோது, இவை அத்தனையும் கடவுளோடு முடிச்சுப் போடப்பட்டிருப்பதைக் கண்டார். கடவுள் நம்பிக்கையை ஒழித்தாலன்றி இந்த இழிநிலைகளை அகற்ற இயலாது என்பதை உணர்ந்து செயல்படலானார்.

சாதி, தீண்டாமை, அடக்குமுறை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனப்படும் ஏற்றத்தாழ்வு என்றிவை கடவுள் பெயரால் கடவுள் சொன்னதாகவே மக்கள் மீது திணிக்கபட்டிருந்தன.

தாழ்த்தபட்டவனுக்குப் பிள்ளை பிறக்கும்பொழுது தாழ்த்தப்பட்டவனாகவே பிறக்கிறான். இப்படிக் கடவுளே சொல்கிறாராம்.

‘உயர்ந்த ஜாதிக்காரன்’ எனப்பட்டவன் தாழ்த்தப்பட்ட பெண்ணோடு உறவு கொண்டு குழந்தை பிறந்தால், அந்த பிள்ளைக்குச் சண்டாளன் என்ற அடையாளம் கொடுக்கபட்டது. இதற்குக் கடவுளால் அசரீரியாகச் சொல்லப்பட்ட வேதத்தையே[அண்டப்புளுகு] ஆதாரமாகக் காட்டினார்கள்.

சண்டாளன் என்னும் சமஸ்கிருத வார்த்தைக்குப் பிணம் எரிப்பவன் என்று பொருள்.

வயசுப் பெண்களைப் பொட்டுக்கட்டித் தேவதாசிகளாகக்[தேவதாசிகள் எவனெவனுக்கோ தாசிகள் ஆனது தனிக்கதை] கோயிலுக்கு விடுதல் வேண்டும் என்று சொன்னதும் கடவுளால் அருளப்பட்ட வேதங்கள்தானாம்.

பெண்கள் அரை நிர்வாணமாகத் திரிய வைக்கப்பட்டதும்[அந்தச் சாதிப் பெண்கள் எவர் என்பது சங்கிகளின் அடிமையான சீமானுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை] கடவுளின் பெயரால்தான்.

சேர நாட்டில்[தமிழ்நாட்டிலும்தான்], ஒவ்வொரு வீட்டிலும் ‘பருவம் அடைந்த பெண் திருமணம் ஆனவுடன், முதலில் குறிப்பிட்ட உயர்ந்த சாதிக்காரனோடு[மிட்டா, மிராசு, ஜமீன்] உடல் உறவில் ஈடுபட்டு முதல் பிள்ளை பெற்ற பிறகுதான் கணவனோடு சேர வேண்டும்’ என்பதும் கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட வழக்கங்களில் ஒன்று. கடவுளின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியமும் ஆகும்.

இந்தப் பழக்கத்தை மீறும் எந்த ஒரு பெண்ணும் கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லபட்டாள்.

கடவுள் சொன்னதாகக் கதைகள் கட்டி, மேற்கண்டவை போன்ற மிகக் கொடூர நிகழ்வுகளுக்கு வழி வகுத்த அயோக்கியர்களையும், அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்களையும் சாடுவதன் மூலம் சாமானியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பெரியார்[இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். பட்டியல் நீளும்].

அந்தப் பெரியாரைத்தான், சங்கிகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, ஈரோட்டில் தெருத்தெருவாகப் பொய்யுரைத்து இழிவுபடுத்தித் திரிகிறான் சீமான் என்னும் இழிகுணத்தவன்.

திங்கள், 27 ஜனவரி, 2025

பெரியார் நேரில் வந்தால் கடித்துக் குதறமோ சீமான் என்னும் வெறி நாய்!!!

[பெரியார் இப்படிச் சொன்னார் என்பது அப்பட்டமான பொய்; இது, சீமான் கடைந்தெடுத்த பொய்யன் என்பதற்கான ஆதாரம்]

வாக்குச் சேகரிப்பில்[ஈரோடு இடைத் தேர்தல்], ஆளும் ‘தி.மு.க.’வைச் சாடுவதைவிட,  தன் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட, பெரியாருக்குள்ள மரியாதையை மிச்சம் மீதியில்லாமல் சிதைத்து அழிப்பதே சீமானின் முக்கிய நோக்கம் என்பதை, வெறித்தனமான இவனின் பேச்சால் அறிய முடிகிறது.

ஒட்டுமொத்த உடம்பையும் முறுக்கேற்றிக்கொண்டு குதிக்கிறான்; துள்ளுகிறான்; முஷ்டியை உயர்த்தி, “என் எதிரில் வா. உன்னை அடித்தே கொன்றுபோடுகிறேன்” என்பதுபோல் குஸ்தி கட்டுகிறான்; கன்னத்தில் தட்டுகிறான்; உள்ளங்கையில் தட்டித் தட்டிச் ‘சொடக்கு’ப் போடுகிறான்; நெஞ்சில் அடித்துக்கொள்கிறான்; ‘கண்ணில் பட்டால் கடித்துக் குதறுவேன்’ என்பது போல் கர்ஜிக்கிறான். கண்களில் தீப்பொறி பறக்கிறது; அவயவங்களின் ஒவ்வோர் அசைவிலும் கட்டுக்கடங்காத கோபம் கொந்தளிக்கிறது[இன்னும் இப்படி நிறையச் சொல்லலாம்].

ஆக்கபூர்வமான கருத்துகளைச் சொல்லாமல் ஆக்ரோசப் பேச்சின் மூலம் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறான், பல ஆண்டுகளாக ‘நாம் தமிழர்’ என்று சொல்லித் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கிய இவன்[பல கட்சி மாறிய வேடதாரி]; இப்போது பெரியாரை அவமதித்துச் சங்கிகளோடு சங்கமித்து, தமிழர்களின் இன உணர்வை மழுங்கடிப்பதில் அதி தீவிரம் காட்டுகிறான்.

இவன் அளவுக்கு பெரியாரை மிகக் கடுமையாக வேறு எவரும்[‘அவர்கள்’ உட்பட] இழிவுபடுத்தியதில்லை.

மனதைப் பதற வைக்கும்... உடம்பெங்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டுபண்ணும் இவனுடைய செயல்பாடுகளுக்காகத் தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

காரணம்.....

எடுத்தால், இவன் மக்களின் அனுதாபத்தைப் பெறுவான்; வெற்றி பெறுகிறானோ அல்லவோ, இவனின் வேட்பாளர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசு அஞ்சுவதாக இருக்கக்கூடும்.

தமிழ்நாடு அரசின் நிலைதான் இதுவென்றால், இவனின் அடாவடித்தனங்களைக் கண்கூடாய்க் காண நேர்ந்தும் தமிழ் மக்கள் அமைதி காப்பது ஏன் என்று புரியவில்லை.

பெரியாரால் தங்களுக்கு எந்தவொரு நன்மையும் விளையவில்லை என்று இவர்கள் எண்ணுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

சந்தேகிப்பதில் தவறே இல்லை என்றால், ‘தமிழன்’ வேடம் புனைந்து தமிழினத்தைச் சங்கிகளிடம் சரணடைய வைக்கும் போலித் தமிழன் சீமான் போன்றவர்களிடம் சிக்கித் தமிழினம் சீரழியும் என்பது உறுதி!

                                           *   *   *   *   *
****** அன்று பெரியாரைப் பாராட்டியதும் இதே நாய்தான்! காணொலி:

***‘பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி’ என்று சொன்னது ஏன்?

பின்வரும் முகவரியைச் சொடுக்கிப் பதிவை வாசியுங்கள்.


                        *   *   *   *   *
“ஆடவன் தாயையும் மகளையும் சகோதரியையும் புணரலாம்” என்று சொன்னவன் பிரம்மா[புராணக் கதை > பதிவு முகவரி கீழே].

இது போன்ற கதைகளைச் சுட்டிக்காட்டித்தான் புராணங்களை எரிக்க வேண்டும் என்றார் பெரியார். கதையில் இடம்பெற்றுள்ள வாசகத்தைப் பெரியார் சொன்னதாகக் குரைத்திருக்கிறது இந்தச் சீமான என்னும் சொறி நாய்.

புதன், 8 ஜனவரி, 2025

சீமானுக்குத் தேவை செருப்படி வைத்தியம்!!!

பிரம்மன் அவனது மகளாகிய பத்மையின் அழகைக் கண்டு மோகித்து, அவளுடன் உறவு கொள்ள ஆசைப்பட்டு அவளின் சம்மதத்தைக் கேட்கிறான். பத்மை மறுக்கிறாள். அவளைச் சமாதானப்படுத்தும் வகையில் ஒரு வேத வாக்கியம் சொல்கிறான் பிரமன். அந்த வேத வாக்கியத்தின் பொருள், "ஒரு மகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தாய், தமக்கை, மகள் என்று யாரோடாயினும் ஆண் புணர்ச்சி செய்யலாம்" என்பதாகும்.

இது போன்ற ஆபாசக் கதைகளை எடுத்துச் சொல்லித்தான் புராணங்களைப் புறக்கணிப்பதற்கான[எரிக்கவும் செய்தார்] காரணங்களை மக்களிடம் எடுத்துரைத்தார் பெரியார்.

தன்னைத் தமிழினக் காப்பாளனாகக் காட்டிக்கொண்டு, மனம்போன போக்கில், பொதி சுமக்காத கழுதைபோல் கத்தித் திரியும் சீமான், ’காம இச்சையைத் தாயுடனும் மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று பெரியார் கூறியிருப்பதாகச் சொல்லியிருக்கிறான்[மாலைமலர்].

இந்தப் ‘பட்டி’யின் பேச்சு தமிழரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெரியார் பற்றாளர்கள் பலரும் இவனை எச்சரித்திருக்கிறார்கள்.

மன்னிப்பெல்லாம் தேவையில்லை. இவன் போகிற இடங்களிலெல்லாம் மக்கள் இந்த நாயைச் சுற்றிவளைத்து, நனைத்த செருப்பால் அடிப்பதே இவனின் இழிசெயலுக்கு ஏற்ற தண்டனை ஆகும்.

இந்தச் செருப்படி குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கேனும் நீடிப்பது அவசியம்.

அப்போதும்கூட இந்தத் தெருப்பொறுக்கி திருந்துவானா என்பது கேள்விக்குறிதான்!

                      *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/tamilnadu/seemans-controvercy-speech-on-periyar-755152