மோடி | சாதனைகள் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி | சாதனைகள் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சாதனை மன்னர் நரேந்திர மோடி!!!

லக அளவில் நம் பிரதமர் மோடியைப் போல் சாதனைகள் நிகழ்த்திய தலைவர்கள் எவருமில்லை.

பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டேபோகும் என்பதால், அவற்றில் குறிப்பிடத்தக்க சிலவற்றை மட்டும் பதிவு செய்கிறோம்.

*மதச் சார்பற்ற ஒரு நாட்டின் பிரதமராக இருப்பினும், ராமன் என்னும் 100% கற்பனைக் கதாபாத்திரத்திற்குக் கோடி கோடி கோடி ரூபாய் செலவில் கோயில் கட்டிக் கொண்டாடி, பெரும்பான்மை மக்களையும் கொண்டாடச் செய்து, செத்தொழிந்த பிறகு சொர்க்கம் சேர்வதை 100% உறுதிப்படுத்தியவர் நம் பெருமதிப்பிற்குரிய பிரதமர் அவர்கள்.

*புண்ணியப் பாரதத்தில் காலங்காலமாய்க் கோயில்களுக்கான கும்பாபிஷேகத்தின்போது சாமி சிலைகளைப் பிரதிஷ்டை செய்தவர்கள் பிராமணர்களே[கடவுளின் பிரதிநிதிகள்] என்னும் நடைமுறையைத் தகர்த்து, முதன் முறையாக, பிராமணர் அல்லாதவர் என்ற வகையில் பிரதிஷ்டை செய்து ஒட்டுமொத்த உலகையும் பிரமிப்பில் ஆழ்த்திய புரட்சியாளர் நம் பிரதமர் அவர்கள்.

*தம் மாநில மக்களின் மொழி உணர்வையும் இன உணர்வையும் தூண்டிவிடும் மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த சுயநல ஆட்சியாளர்களின் கொட்டத்தை அடக்க, நீட் தேர்வு, புதியக் கல்விக் கொள்கை என்று புதிய நடைமுறைகளைத் திணித்து மாநிலங்களின் உரிமைகளைக் கைப்பற்றும் நம் பிரதமர் அவர்களின் நுண்ணறிவு வியக்கத்தக்கதாகும்.

*மாற்றுக் கட்சிக்காரர்களின் மிக மோசமான நிர்வாகம் காரணமாக, மன அமைதி இழந்து தவிக்கும் சில மாநிலங்களின் மக்களைக் குஷிப்படுத்திக் கிஞ்சித்தேனும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காகச் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஆளுநர்களாகக் கோமாளிகளையும் மனநோயாளிகளையும் நியமித்தது நம் பிரதமரின் அதி புத்திசாலித்தனத்தின் அடையாளம் ஆகும்.

*பல்வேறு பணிகளுக்கிடையே, அயல்நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதாகச் சொல்லி, வயதான நிலையிலும் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட/மேற்கொள்ளும் போற்றுதற்குரிய தியாகியும் ஆவார் நம் பிரதமர். 

*திருந்தவே திருந்தாத மூடர்கள் நம் மக்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களைத் திருத்த இந்த நாட்டின் பிரதமர் ஆனால்தான் சாத்தியப்படும் என்பதை ஆராய்ந்து அறிந்த நம் பிரதமர் அவர்கள், கண்ட கண்ட கோயில்களுக்கெல்லாம் சென்று தம்மை ஆகச் சிறந்த ஆன்மிகவாதியாக அடையாளப்படுத்தியதன் மூலம், பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பிரதமர் ஆனார். வரவிருக்கும் தேர்தலிலும் வென்று பிரதமர் ஆனால், வெகு நிதானமாகவும் படிப்படியான நடவடிக்கைகள் மூலமாகவும் அவர்களிடமுள்ள மூடநம்பிக்கைகளைக் குறைத்திட அயராது பாடுபடுவார் என்பது உறுதி.

வாழக நம் பிரதமர்! தொடரட்டும் அவரின் சாதனைகள்!!