வியாழன், 1 ஆகஸ்ட், 2024

மனிதமும் அறிவும் மாந்தரின் இரு கண்கள்!

னிதர்களுக்கு வாய்த்திருப்பது அற்ப வாழ்நாள்.

இந்தக் குறுகிய கால அவகாசத்தில், ஓரளவுக்கேனும் அமைதியாய் வாழ்ந்து முடிக்க உதவுபவை ஆறறிவும் மனிதநேயமும்.

வறுமை, நோய், பகைமை, இயற்கைச் சீற்றங்கள்[வயநாட்டுத் துயர நிகழ்வுகள் நினைவுகூரத்தக்கவை] என்றிவை போன்றவைதான் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு[நாம் அனுபவிக்கும் இன்பங்கள் குறைவு] அடிப்படைக் காரணங்களாக உள்ளன.

ஆறறிவைப் பயன்படுத்தி[னால்] இயன்றவரை இவற்றின் தாக்குதலிலிருந்து தப்பி வாழலாம்.

எவ்வளவுதான் இதைப் பயன்படுத்தினாலும், துன்பங்களிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியமே இல்லை.

ஆனாலும், மனிதர்கள் மனித நேயத்துடன் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஒருவர் உறும் துன்பத்தின் பாதிப்பை[இயற்கைச் சீற்றத்தால் விளையும் துயரங்கள் உட்பட] குறைத்திட முடியும்.

எனவே, மனிதராய்ப் பிறந்த அத்தனைப் பேரின் கடமை அறறிவை வளர்ப்பதோடு, மனித நேயத்தையும் வளர்ப்பதுதான்.

இவை இரண்டும்தான் மனிதர்களுக்கான தவிர்க்கவே கூடாத மிக முக்கியத் தேவைகளாகும்.

இவற்றை நாளும் வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், செத்த பிறகான வாழ்க்கை[மீண்டும் பிறத்தல், சொர்க்கம் சேர்தல் போன்றவை] குறித்துக் கவலைப்படுவது, இல்லாத கடவுள் மீதான பக்தியைப் பெருக்குவது, சாதி மதப் பற்றை வளர்ப்பது, ஆதிக்க வெறியைத் தூண்டுவது என்றிவை போன்றவை அறிவீனர்கள் செய்யும் செயலாகும்; அவர்களை அயோக்கியர்கள் என்றும் சொல்லலாம்.