எனது படம்
அழிவது ஆறறிவு. அழியும் தன் அறிவால் மனிதன் என்றென்றும் அழியாத கடவுளைக் கண்டறிந்தது எப்படி?... எப்படி??... எப்படி???

புதன், 16 மார்ச், 2022

'பிரபஞ்சம் 13,800,000,000! தனி மனிதன் 100!'... ஏன் இந்த அநீதி?!

பிரபஞ்சம் தோன்றியது  13,800,000,000 ஆண்டுகளுக்கு முன்பு[the age of universe 13.8 billion years].

இதில் இடம்பெற்றுச் சுற்றுவதும் சுழலுவதுமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணக்கிலடங்காத நட்சத்திரங்கள், கோள்கள் என்றிவற்றில் ஒன்றான பூமியின் வயது 4,540,000,000[earth 4.54 billion years] ஆண்டுகள். 

உயிரினங்களின் உற்பத்தி தொடங்கியது 354,000,000[3,54 billion years. புவி தோன்றி 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தோற்றம் பெற்றன] ஆண்டுகளுக்கு முன்னர். 

உயிரினங்களில், வாலில்லா மனிதக் குரங்குகள் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், ஆதி மனிதர்கள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றினார்கள். 

இவை, அறிவியலாளர் தரும் தகவல்கள்.

மேற்கண்டவற்றில், பிரபஞ்சத்தின் ஆயுளும், பூமியின் ஆயுளும், உயிரினங்களின்[உயிர்களின் தொகுப்பு] ஆயுளும்  பில்லியன் கணக்கில் உள்ளன. மனித இனத்தின் ஆயுள்கூட லட்சக்கணக்கில்.

இவையெல்லாம் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் தகவல்கள்தான். இருப்பினும்.....

துய்த்தல் சுகத்தை அனுபவிக்கிற தனித்தனி[மனிதன் உட்பட] உயிர்களின் ஆயுளோ வெகு அற்பம்[இனம் என்பது 'உயிர்களின் தொகுப்பைக் குறிக்கும் ஒரு சொல். இனத்துக்குத் 'துய்த்தல்' என்பது இல்லை].

இது, மனிதனை உள்ளடக்கிய தனி உயிர்களுக்கு இயற்கை செய்த துரோகமா, கடவுளின் கைங்கரியமா?!

=========================================================================