எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 2 அக்டோபர், 2025

அச்சுறுத்தும் மனித மரணத்தின் அந்திமக் கட்டம்[அமங்கலப் பதிவு]!

ரணத்தைத் தழுவ இருப்பவர்களில் மிகப் பெரும்பாலோர்[விபத்து, கொலை போன்ற அசம்பாதங்களில் இறப்போர் நீங்கலாக]  முதலில் எதிர்கொள்ளும் இழப்பு ‘பசியின்மை’[1] ஆகும்[ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்புப் பராமரிப்பு நிபுணரான ஜேம்ஸ் ஹாலன்பெக்கின் கூற்றுப்படி].

பசியின்மையால், உடம்புக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் போன்றவற்றைப் பெறுதல் இயலாமல்போகிறது. இந்நிலையில் மரணம் நிகழ்வது உறுதியாகிறது.

அடுத்து, பேசும் திறன்[2] குறையத் தொடங்குவதால், பிறருடன் உரையாடுவது மிகவும் கடினமாகிறது. 

பேசுவதற்கான சக்தி முற்றிலுமாய்த் தடைப்படும்போது மரணத்தை எதிர்கொள்பவர் மயக்கமடைகிறார்; சுவாசிப்பதில் சிரமம்[3] ஏற்படுகிறது.

மரணத்துடன் போராடுபவர் அடுத்தகாக இழப்பது பார்வைத் திறன்[4]. மிக அருகில் இருப்பனவற்றையே அவரால் பார்க்க இயலும்.

இந்நிலைக்கு உள்ளாகும்போது அவரின் இமைகள் பாதி திறந்தோ முற்றிலுமாய் மூடியோ இருக்கலாம்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிதல்{அறிவு}[5] அவருக்கு எளிதானதல்ல; அது சாத்தியம் இல்லாமலும் போகலாம்.

செல்லப் பிராணிகளையோ, உறவினர்களையோ, உற்ற நண்பர்களையோ பார்ப்பது போன்ற மாயத் தோற்றங்கள்[6] இறந்துகொண்டிருப்பவரின் மூளையில் காட்சிப்படுத்தப்படலாம்.

சுயநினைவை இழப்பதும் பெறுவதுமான நிலைகளில் இருந்துகொண்டிருக்கும் அவர், மிச்சமிருந்த கொஞ்சம் தொடுதல் உணர்வு[7]யும்  முற்றிலுமாய் இழக்கிறார்.

***மேற்கண்ட தகவல்கள், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகளால் ஏப்ரல் 2024இல் வெளியிடப்பட்டது.

                                   *   *   *   *   *

Your senses will shut down in a specific order when you’re about to die[copy & paste]