திங்கள், 21 செப்டம்பர், 2020

பெரியாரை 'விஷமி' என்று பரப்புரை செய்யும் 'தினமலர்' பார்ப்பான்!!!

திராவிட இயக்கத்தைச் சார்ந்த சிலரைத் தவிர,  பிராமணர் என்று சொல்லப்படுவர்களை, தமிழ் உணர்வாளர்கள் பலரும் 'பார்ப்பனர்' என்று எழுதுவதையோ பேசுவதையோ தவிர்த்துவரும் இன்றைய சூழலில், 'பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நஞ்சாய்ப் பரப்பிய 'விஷமி' ஈ.வெ.ரா  என்று பரப்புரை செய்வதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறது 'தினமலர் பொறுக்கி'க் கும்பல்.

'பணத்திற்குக் குறைவில்லாமல் இருந்தும் அவர் ஆரம்பக் கல்வியான ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. அவருக்குப் படிப்பு ஏறவில்லை' என்று, நக்கல் செய்திருக்கிறது[சில நாட்கள் முன்பு வெளியான தினமலர்க் கட்டுரையில்]. முகவரி கீழே. 

தங்களைப் பிராமணர்கள்' என்று பீத்திக்கொள்ளும் இவர்கள், காமராசரை இப்படிக் கிண்டல் செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

பெரியாரை, 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்' என்று குறிப்பிட்டுத் தன் குதர்க்கப் புத்தியையும் வெளிப்படுத்தியிருக்கிறது இந்தத் தினப்புருடா. ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளுமே அவருக்குத் தெரியாது என்கிறது பரம்பரையாய் 100% படித்தவர்களைக் கொண்ட இந்தத் திமிர் பிடித்த கூட்டம். இப்படிப் பலவகையிலும் பெரியாரை இழிவுபடுத்தியிருக்கும் இந்தத் தின மலம், தங்களின் ஜாதிப் பெருமையைப் பக்கம் பக்கமாகப் பட்டியலிட்டிருக்கிறது.

கபிலர், தொல்காப்பியர் போன்றவர்கள், பிராமணர்கள் என்றே வரலாறு கூறுகிறதாம். நல்லது எது, கெட்டவை எது என்பது தெரிந்ததால், பல மன்னர்கள், பிராமணர்களைத் தங்கள் குருவாக ஏற்றிருந்தார்களாம். அவர்கள், பிராமணர்கள் தனியே வாழ, தனித் தெருக்களை அமைத்து, இல்லங்களையும் கட்டிக் கொடுத்தார்களாம்.

'அந்தணர் என்போர் அறவோர்' என்பது பெரியோர் வாக்கு. இந்தப் பார்ப்பனர்கள் அந்தணர்கள் அல்ல. 

இவர்களை அக்கால மன்னர்கள் சிலர் குருவாக ஏற்றிருந்தனர் என்பது உண்மைதான். இவர்கள் நல்லது கெட்டது தெரிந்தவர்கள் என்பதால் அல்ல; கடவுள், சொர்க்கம், நரகம் என்பனவற்றின் பெயரால் அளப்பரிய பொய்க் கதைகள் சொல்லித் தங்களைக் கடவுளின் பிரதிநிதிகள் என்று அவர்களை நம்ப வைத்ததால்.

இவர்கள் தமிழோடு சமஸ்கிருதம் கற்றவர்களாம்.

சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீஷபாஷை என்று எழுதியதையும் பேசியதையும் மூடி மறைத்தது ஏன்?

'தீக்குறளை சென்றோதோம்'[குறளை-புறம் பேசுதல்] என்ற ஆண்டாள் பாடல் வரிகளுக்கு, 'மஹா பெரியவா' தீய திருக்குறளைப் படிக்க மாட்டோம்' என்று பொருள் சொன்னதையெல்லாம் ஏன்  இருட்டடிப்புச் செய்தார்கள்?

உ.வே.சா. போன்ற தமிழுக்குத் தொண்டு செய்த சில[சிலர்தான்] ஐயர்களைக் குறிப்பிடத் தெரிந்த இவர்கள், இன்றளவும் தன்னைத் தமிழன் என்றோ, என் தாய்மொழி தமிழ் என்றோ சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணிச் சொல்வார்களா?

'காலையும், மாலையும் சூரியனை வணங்குபவர்கள். முப்புரி நுால் எனும் பூணுால் தரித்தவர்கள். சிவனையும், விஷ்ணுவையும் கும்பிடுபவர்கள்; ஆசாரமாய் விளங்குபவர்கள்' என்று தங்களைப் பற்றிக் குறிப்பிடும் இவர்கள், கடவுள்களைப் பற்றிக் கணக்குவழக்கில்லாமல் ஆபாசக் கதைகளை எழுதி எழுதித் தமிழர்களை முட்டாள்கள் ஆக்குவதில் முன்னிலை வகித்தவர்களும் இவர்கள்தான்  என்பதை அடியோடு மறந்துவிட்டது ஏனோ?

இவர்கள் வேதம் ஓதியவர்களாம்.

பார்ப்பனர்களைக் கடவுளுக்குச் சமமாக உயர்த்தி, ஏனையோரை இழிபிறவிகளாக் கற்பிப்பதும், மனிதர்களால் கற்பனையாக எழுதப்பட்டதுமான வேதங்களை ஓதுபவன் மட்டும் யோக்கியனா? மற்ற ஜாதிக்காரர்கள் எல்லாம் அயோக்கியர்களா?

'ஆரியபட்டர் பிராமணர். அவரின் கலையைக் கற்று, ஜோதிடம் பார்த்தனர். சுக்ருதர் என்ற முனிவர் பிராமணர். இவரின் கலையைக் கற்று, நாட்டு மருத்துவம் அறிந்தனர். அதே போல, வராஹ மிஹிரரும் பிராமணர் தான். அவரும் ஜோதிடத்தில் வல்லுனர். விஷ்ணு குப்தர் என்று அறியப்பட்ட சாணக்கியர், இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே தோன்றிய பிராமணர். அவர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் வல்லுனர்' என்கிறது தினப்பொய் பரப்பும் தினமலர்.

ஆரியப்பட்டரையும், சுக்குருதரையும், வராஹமிஹிரரையும், விஷ்ணுகுப்தர் எனப்படும் சாணக்கியரையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம். எங்களுக்குத் தேவையில்லை.

இவர்கள் மாமிசம் உண்பதில்லையாம்.

இவர்களில், முட்டை தின்கிறவர்கள் இன்று பலர் இருக்கிறார்கள். இது அசைவ உணவு இல்லையா?

மாமிசம் உண்ணாமலிருப்பது யோக்கியனுகளுக்கான தகுதிகளில் ஒன்றா? அசைவம் உண்ணுகிற எத்தனையோ சமூகத் தொண்டர்களும், அறிவியல் அறிஞர்களும் உலக அளவில் பரவிக்கிடக்கிறார்கள். அவர்களெல்லாம் அயோக்கியர்களா?

'மெட்ரிகுலேஷன் எனும், பள்ளிப்படிப்பு முடிவு வரை படித்தவர்கள், அரசில் வேலை பார்த்தனர். எட்டாவது படித்த பிராமணர் கூட, தாலுகா ஆபீசில் வேலை பார்த்தார்' என்கிறது தினமலர்.

அந்தக் காலம் மலயேறிவிட்டது என்று கவலைப்படவும் செய்கிறது. 

'தமிழருக்கு வேண்டிய எல்லாவற்றையும் கற்று, மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும், அனைத்திலும் முதலாக நின்றனர்; பெருமை அடைந்தனர்[பிராமணர்கள்].'

தினமலர்க்காரரே, ஒரு திருத்தம். 'தமிழருக்கு வேண்டிய' என்பதை, 'பார்ப்பனர்களுக்கு வேண்டிய' என்று திருத்துங்க.

இன்றைக்கும் நடுவணரசின் அதிகாரம் மிக்க பதவிகளில் உங்க ஆட்கள்தானே இருக்காங்க. அப்படிப் பல பேர் இருக்கிறதாலதான், சமஸ்கிருதத்தைப் பாடமொழி ஆக்கணும்னு உத்தரவு போட மத்திய அரசை உங்களால தூண்ட முடியுது, இல்லையா?

வெள்ளையர்களால் பேச முடியாத ஆங்கிலத்தைச் சில பிராமணர்கள் பேசினார்களாம்.

'எந்தவொரு சூழலிலும் பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள் நாங்கள்' என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். 1962இல் சீனப் படையெடுப்பில், சீனன் இந்தியாவைக் கைப்பற்றுவான் என்ற வதந்தி பரவியபோது, உங்கள் இனத்துக்காக, அவசர அவசரமாகச் சீன மொழிக்கான அகராதி தயாரித்தவர்கள்தானே நீங்கள்?

'பிராமணர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடே இருக்கக் கூடாது' என, உத்தரவிட்டார் அவர்[?]. அது இன்றளவும் எழுதாத சட்டமாகிவிட்டது. இதற்காகத் தமிழகப் பிராமணர்கள் போராடவில்லை.' -தினமலர்

ஏன் போராடல?

நாங்க பரம சாதுக்கள்னு சொல்லிகிட்டு, மத்த இளிச்சவாயன்களைத் தூண்டிவிட்டுக் காரியம் சாதிப்பது உங்களுக்குக் கைவந்த கலை. வேறு காரணம் ஏதுமில்லை.

கோயிலில் மணியடிக்கிறதும், யாகம் ஹோமம் செய்யிறதும்தான் எங்க குலத்தொழில், மத்ததெல்லாம் உங்க தொழில்னு சொல்லிகிட்டு, தமிழ் மன்னர்களைத் தூண்டிவிட்டு, ஆயிரக்கணக்கான சமணர்களை அன்னிக்கிக் கொன்று குவிச்சீங்க. புத்தமதக் கோயில்களை இந்துக் கோயில் ஆக்கினீங்க. இன்னிக்கும் அம்மாதிரி அடாவடித்தனங்களை வேறு வேறு தந்திர உத்திகளைக் கையாண்டு செய்யுறீங்க. உங்களால் முடியாது எதுவுமே இல்லை பிராமணர்களே.

'அவரின் வகுப்புத் தோழர் ஒருவர், ௬௦ வருடங்களுக்கு முன், எங்கள் குடும்ப நண்பர்; முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பல விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்; அவற்றை நான் எழுத முடியாது'

ஏன் முடியாது?

உங்களுக்குப் பலமான அரசியல் பின்னணி இருக்கு[பெரியாரைச் செருப்பால் அடிப்பேன்னு ராஜாதி ராஜா சொன்னாரே, அதற்கெல்லாம் இந்தப் பின்னணிதான் காரணம். அதனால.....

தைரியமா எழுது. திராவிடக் கட்சிக்காரனோ, பெரியார் தொண்டனோ எவனும் உன் ஒரு மயிரைக்கூடப் புடுங்க முடியாது. எழுது பிராமணா, எழுது!

 ===============================================================

https://m.dinamalar.com/detail.php?id=2617174