அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 7 டிசம்பர், 2021

அணைப்புகள்![சிறுகதை]

ஆடைகளை மீட்டெடுத்து உடுத்துக்கொண்டு,  அவளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்ததும் அங்கிருந்து நகர்ந்தான் அவன். சில வினாடிநேரப் பரிவு கலந்த பார்வையோ, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அனுதாப வார்த்தைகளோ அவனிடமிருந்து வெளிப்படவில்லை.

மிகக் குறைந்த நேரமே அவளை அவன் கையாண்டான் என்பதால் மனதுக்குள் அவனுக்கு நன்றி சொன்னாள் அவள்.

அவன் அவளின் அன்றைய ஐந்தாவது வாடிக்கையாளன். 

ஆறாவதாக வந்தார் ஒரு செல்வந்தர்.

வழக்கமாக வருபவர் மட்டுமல்ல, 'ரேட்' கேட்காமலும் கணக்குப் பார்க்காமலும் கைக்கு வந்ததைக் கொடுத்துவிட்டுச் செல்பவர் அவர்.

அவர் அறைக்குள் நுழைந்தபோது அவளால் எழுந்து நிற்கக்கூடத் தெம்பில்லை; பாட்டிலில் இருந்த பானத்தைக் கொஞ்சம் சுவைத்துவிட்டு எழுந்தாள்.

அவர் அவளுடன் இருந்தார்; பணம் கொடுத்தார்; சென்றார். 

கொஞ்சம் அன்பையோ, கொஞ்சமோ கொஞ்சம் நன்றியையோ புலப்படுத்தும் சிறு சலனம்கூட அவர் பார்வையில் வெளியாகாதது அவளுக்குப் பெருத்த ஏமாற்றத்தை உண்டுபண்ணியது.

அவளைத் தேடிவரும் வாடிக்கையாளர்கள் எல்லோருமே, கொடுக்கும் காசுக்கான சுகத்தை அனுபவித்ததும் காணாமல் போனார்களே தவிர, அவளின் எதிர்பார்ப்பைப் புரிந்து நடந்துகொண்டவர் எவருமில்லை.

அவள் ஆடை உடுத்து வீடு திரும்பினாள்.

அவளின் வரவை எதிர்பார்த்து ஏங்கிக்கிடந்த அவளின் நான்கு வயது மகளின் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது; பாசம் படர்ந்தது; அன்பு பளிச்சிட்டது.

அவள், தன் மகளின் முன் நெற்றி தடவி, கன்னங்களில் முத்த மழை பொழிந்து, வாரி அணைத்தாள்; நெடு நேரம் அணைத்துக் கிடந்தாள். அதில் அளப்பரிய சுகம் கிடைத்தது.

"இந்தச் சுகத்துக்காகத்தானே யார் யாரையோ அரைமனதோடு அரவணைத்துக் கிடந்து காசு சம்பாதிக்கிறேன். இது அத்தனை பெரிய குற்றமா?" என்று மனதுக்குள் முணுமுணுத்தாள் அவள்.

==========================================================================

***"வாலிப வயதுதானே. ஒரு இட்லிக்கடை வைத்தோ, வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்தோ பிழைப்பு நடத்தலாம்; மகளின் மீது அன்பைப் பொழியலாம். இவளுக்கு இந்தக் கேவலமான தொழில் எதற்கு?" என்று கேள்வி கேட்காமல் வாசித்தால் இதுவொரு 'நல்ல சிறுகதை'தான்!

கிழ்வரும் ஆங்கிலச் சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டது இக்கதை.

                                         *  *  *

நன்றி:

She was lying on the bed naked while he zipped up his pants. She was happy this one ended quickly.

He paid her and left.

It was her fifth customer. She was exhausted. She knew she had to clean up and get ready for the next one.

The next was a rich business man. He promised her many things. He made her dream. He was her regular. But she could not get up. She took out a bottle from the drawer, took a sip and then got ready for him.

She thought he would give her the love that she needs. He would be gentle.

He came. He used her. He paid. He left. There was no change in her except that this time she knew that she was being used by him too.

She knew that the opposite of love is to use someone.

She dressed up, went home and fed her 4 year old daughter, while she was tucking her in, there was a sparkle in her daughters eye. She knew that it was love and that's all that she needed to get through another day.

She was lying on the bed in her night clothes

"Is it worth doing that job" she asked herself.

Yes was the answer because she had mouths to feed and bills to pay.

It was love that got her into the business and it is love that would sustain her.

==============================================================================