பக்கங்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

கல்யாணம் இல்லாமலே பெண்கள் பிள்ளை[கள்] பெறலாம்... சீனாவில்!!!

சீனாவில் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது. இதன் விளைவாக, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. 

எனவே, நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தைக் கொள்கையைக் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் 3 குழந்தைகளைப் பெறவும் அந்த நாடு அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும், சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியைத்தான் கண்டுவருகிறது. 


இந்த நிலையில், சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள[பெறுபவள், திருமணம் ஆகாத பெண் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அவளுக்குக் கணவன் என்று ஒருவன் இல்லை. ‘சேர்ந்து’ வாழ்பவன் இருந்தாலும் எந்த நேரத்திலும் அவளைப் பிரிந்து செல்லலாம்] மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவரும் சலுகைகள், மானியங்கள் போன்றவை இனி திருமணமாகாத தம்பதி[திருமணம் ஆகாமல் தம்பதி ஆவது எப்படி?]களுக்கும் கிடைக்கும்{மாலை மலர் 31 ஜனவரி 2023 8:19 AM} 


சீன அரசின்[ஒரு மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சலுகை சீன நாடு முழுவதற்கும் விரைவில் வழங்கப்படலாம்]. இதனால் விளையும் நன்மைகள் மிகக் குறைவு என்பதோடு, தீமைகள் அதிகம் என்பது நம் கணிப்பு.


நன்மைகள்:

*மணமாகிக் குழந்தையும் பெற்ற பிறகு மணவிலக்குச் செய்ய நேர்ந்தால், ‘குழந்தையை யார் வளர்ப்பது’ என்னும் பிரச்சினை எழும். மணமாகாமல் இருந்து குழந்தை பெறும்போது இந்தப் பிரச்சினைக்கே வாய்ப்பில்லை.


*மனதுக்குப் பிடித்த ஒருவனுடன் ‘இருந்து’ முழு விருப்பத்துடன் உடலுறவு கொண்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும்[என்பார்கள் நம் முன்னோர்கள்]; அதி புத்திசாலியாக வளரும்.


*கல்யாணம் ஆகாமலே ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு திருமணம் செய்துகொண்டால், மலடிப் பட்டம் சூட்டி குழந்தைக்காகக் கணவன் இன்னொரு திருமணம் செய்யும் முறை அறவே ஒழியும்.


*மணம் புரியாத பெண்களுக்குக் குழந்தை தருவதையே ‘அது’ விசயத்தில் தேர்ச்சி பெற்ற ஆண்கள்  தொழிலாகக் கொள்ளலாம். நிறையச் சம்பாதிக்கவும் செய்யலாம். ஹி... ஹி... ஹி!!!


ஆக, சீன அரசின் இந்த முடிவால் இவ்வாறு சில நன்மைகள் விளைவது உறுதி.



பிரச்சினைகள்[+தீமைகள்]:


*குழந்தை பெறுவதற்கு ஓர் ஆண் தேவை. ஓர் ஆணுடன் சில காலம் உறவு கொண்டு குழந்தைப் பேறு வாய்க்காவிட்டால், வேறு ஆணைத் தேட வேண்டிவரும். இதனால், பல ஆடவருடனான உறவு அதிகரிக்கும்.


இதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? சாத்தியம் இல்லை என்றால், பல குடும்பங்கள் விபச்சார விடுதிகள் போல மாறும் அவலம் நேரிடும்.


“குழந்தை பெறும்வரை எவருடனும் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும். குழந்தை பெற்ற பிறகு அவர்களுடனான உறவைத் துண்டிப்போம்” என்று தாய்க்குலம் கோரிக்கை வைத்தால் சீன அரசு அதை ஏற்குமா?


“எனக்கு இன்னும் நான்கைந்து பெற்றுக்கொள்ள விருப்பம்” என்று சொல்லும் பெண்கள் விசயத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்னவாக இருக்கும்?


*‘உடலுறவுச் சுதந்திரம் கிட்டுவதால், மணம் புரியாமல் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனித்துவிடப்பட்ட ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இச்சையைத் தணிக்க மனம்போன போக்கில் ஆண்கள் அலைய நேரிடலாம். இதனால், பாலுறவு தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றிலுமாய் உடைந்து சிதற, இது தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க நிறையவே வாய்ப்புள்ளது.


*’குடும்பம்’ என்னும் அமைப்பு முற்றிலுமாய்ச் சிதையும் நிலையில்,

கணவன் மனைவி என்னும் இருவரின் வழிகாட்டலில் வளர வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தாய் மட்டுமே பொறுப்பேற்பாள். இதனால் விளையும் பாதகங்கள் சிலவாகவோ பலவாகவோ இருக்கலாம்


* * * * *

இந்த அறிவிப்பால் மேற்கண்டவாறு, சில நன்மைகளோடு பல தீமைகளும் விளைந்திடும் என்பது பற்றிச் சீன அரசும் நிறையவே யோசித்திருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள இடமில்லை.


யோசிக்காமல், சீனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி மட்டுமே அது கவனம் செலுத்தியிருந்தால், அதன் விளைவுகள் மிக மோசமானவையாகவே இருக்கும்!

===========================================================================================================

குறிப்பு:

மணமாகாத தம்பதியர் என்று சீன அரசு சொல்வது ‘சேர்ந்து’ வாழ்பவர்களைக் குறிப்பதாகக்கொள்ளலாம். ஆனால், சேர்ந்து வாழ்வது சட்டபூர்வமானதல்ல; நிரந்தரமானதும் அல்ல. சேர்ந்து வாழ்பவன் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம் என்பதால் இந்த அனுமதி பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.


ஆக, சீன அரசு வழங்கும் இந்த அனுமதி ஒழுக்கச் சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கும் என்பது அறியத்தக்கது.