செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

பெருகுது ‘கள்ள உடலுறவு’க் கொலைகள்! அதிகரிக்குமா [ஆண்]விபச்சாரர் எண்ணிக்கை?!

                                      [The Untold Story Of The Male Prostitutes Of Ancient Greece]

அவர் கட்டட மேஸ்திரி[இது குறித்த காவல்துறை விசாரணை நிலுவையில் இருப்பதால் ஊரும் பெயர்களும் தவிர்க்கப்படுகின்றன. கீழே உள்ள முகவரி* வாயிலாக விரிவான செய்தியை அறிந்திடுக] திருமணமானவர், இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள்.

மனைவிக்கு ஒரு பேக்கரியில் வேலை. உடன் வேலை பார்த்த ஒருவருடன் அவ்வப்போது கள்ள உடலுறவுச் சுகம் அனுபவிப்பதை வழக்கமாக்கியுள்ளார்.


இது விசயம் அவருக்கு[கணவர்]த் தெரிந்தபோது, மனைவியைக் கண்டித்ததுடன் வேலைக்குச் செல்லவும் தடை விதித்தார்.


ஆனாலும், அந்தப் பெண் கள்ள உறவாளனுடன் பேசியில் உரையாடுவது தொடர்ந்தது. உடலுறவு இன்பம் அனுபவிக்காத நிலை தொடர்ந்ததால் அந்தச் சுகத்துக்காக இருவரும் ஏங்கிக் கிடந்தார்கள்.


‘அது’ இல்லாமல் வாழ்வது இயலவே இயலாது என்பதை உணர்ந்த இருவரும், ‘அவர்’ஐக் கொலை செய்திடத் தீர்மானித்தார்கள்.


திட்டம் தீட்டினார்கள்; தீர்த்துக்கட்டினார்கள்.


இது அண்மை நிகழ்வு.


இதைப்போலவே, ஒரு பெண் கள்ள உறவுக்காரனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வது என்பது சமுதாயத்தில் அடிக்கடி இடம்பெறும் அவல நிகழ்வாக உள்ளது.


தாலி கட்டியவனின் உயிருக்கு உலை வைக்கிற ஒரு பெண்ணுக்கு[கணவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல என்பது வேறு விசயம்], குழந்தைகளின் எதிர்காலம் உட்பட, அதன் பின்விளைவு என்னவாக இருக்கும் என்பது தெரியும்தான்[தண்டனையிலிருந்து தப்புகிறவர்களும் உள்ளனர்].


அப்புறம் ஏன், இப்படியான கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்?


‘அந்த’ நினைப்பு தரும் போதையில் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் அறிவை அறவே இழப்பதுதான் காரணம்.


கணவனிடம் பெற்ற காம சுகம் கட்டுபடி ஆகாமல் வேறு ஒருவனிடம் கூடுதலாகப் பெற்றுச் சுகித்த அனுபவமும் காரணமாகும்.


ஆணாக, இருந்தால், அக்கம்பக்கத்தவருக்குத் தெரியாமல் விலைமகளிர் விடுதிக்குப் போய்த் தாபம் தணித்துத் திரும்புகிறான்.


நம் சமூகச் சூழலில் ஒரு பெண்ணுக்கு இது சாத்தியமே இல்லை.


தப்புச் செய்ய விரும்பாதவர்கள் அடக்கி அடக்கி வைத்துத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது அரைப் பைத்தியமாக வாழ்நாளைக் கடத்துகிறார்கள்.


இப்படியாக, இம்மாதிரிச் சம்பவங்கள் குறித்து நிறையப் பேசுகிறோம்; எழுதுகிறோம். பயன் ஏதும் விளைகிறதா எனின், இல்லை என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது.


எனவே, இனியும் இம்மாதிரியான நிகழ்வுகள் சமுதாயத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே புத்திசாலித்தனமான செயலாகும்.


சிறியேனின் சிறுமதியில் உதித்த சில வழிமுறைகள்:


1.சிறு வயதிலிருந்தே, கற்பு, கலாச்சாரம் என்றெல்லாம் போதிப்பதை நிறுத்துவது.


2.ஒழுக்க விதிகளைத் தளர்த்துவது[இயல்பாகவே மனைவியின் தவறான நடத்தைகளைக் கண்டுகொள்ளாத கணவர்கள் உள்ளனர் சில அப்பாவிப் பெண்களைப் போலவே]


3.‘விலைமகன்கள்’ விடுதிகளுக்கு அனுமதி[நெறிமுறைகளுக்கு இணங்க] அளிப்பது அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது என்னும் கொள்கையை அரசுகள் கடைபிடிப்பது.


இது விசயத்தில், கீழ்க்காணும் உலக நாடுகள் சிலவற்றை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.


*Caribbean countries ஜமைக்கா, பாரொஅடாஸ், டொமினிகன் குடியரசு போன்ற தீவுகள் அந்தத் தொழிலுக்குப் புகழ் பெற்றவை. ஆண் விபச்சாரர்களும் அங்கு உள்ளனர்.


*Phillippines இல் 80,000 விபச்சாரர்கள் ‘தொழில்’ செய்கிறார்கள். https://www.newssensetn.com/ampstories/world-news/10-sex-tourism-destinations-around-the-world


*சீனாவில் ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 500(5000?) வாடகையில் விலைமகன்களை ஏற்பாடு செய்யும் ‘தொழில்’ நிறுவனங்கள் உள்ளன[தேடலின் மூலம் இன்னும் அதிக விவரங்களப் பெறலாம்].


*முகநூலில் ‘நான் விபச்சாரன்’ என்று தலைப்பிட்டு, தளத்தில் இணையுமாறு அழைக்கும் விலைமகன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது[*முகவரி கீழே].


***உயிர் முக்கியமா, ஒழுக்கம் முக்கியமா என்னும் கேள்வி எழும்போது, வருங்காலத்தில் நம் மக்கள் எதைத் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொருத்தது, விபச்சாரரின்[விபச்சாரிகளும்] எண்ணிக்கை கூடுவதும் குறைவதும்!


எது எப்படியோ, இது விசயத்தில், மாநில மத்திய அரசுகள் அதிகக் கவனம் செலுத்துவது மிக அவசியம் என்று தோன்றுகிறது.

* * * * *


*https://www.maalaimalar.com/news/state/a-young-woman-who-killed-her-husband-along-with-a-blackmailer-made-a-sensational-confession-to-the-police-655344


*https://www.facebook.com/public/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D