//பாகிஸ்தான்: போராட்டத்தின்போது, மிக உயரமான கன்டெய்னரில் அமர்ந்து மத வழிபாடு செய்துகொண்டிருந்த நபர் ஒருவரை, பாதுகாப்புப் படையினர் இரக்கமின்றிக் கீழே தள்ளிவிடும் காட்சி[காணொலி முகவரி கீழே] இணையத்தில் வைரலாகி வருகிறது// -செய்தி. https://www.puthiyathalaimurai.com/world/pakistan-forces-pushing-praying-protester-off-containers-goes-to-v
படம்:
‘பெரிய போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது கடவுள் ‘அல்லா’விடம் கையேந்திப் பிரார்த்தனை செய்யத் தூண்டியது ‘பரம பக்தியா’, பித்துக்குளித்தனமா?’ என்னும் விவாதம் இப்போது வேண்டாம்.
போராட்டம் வெற்றி பெறுதல் வேண்டுமென்றோ, பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை அல்லா தடுத்து நிறுத்துதல் வேண்டும் என்றோ அந்தப் பக்தர் பிரார்த்தனை செய்திருப்பார்.
அவரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து அவருடையக் கோரிக்கையைக் கடவுள் அல்லா[ஹ்] நிறைவேற்றியிருத்தல் வேண்டும்[பாவம், பக்தர் அத்தனை உயரத்திலிருந்து தள்ளிவிடப்பட்டதைக்கூடத் தடுக்கவில்லை; அந்த நபர் இறந்திருக்கவும்கூடும்]; செய்யவில்லை[தள்ளிவிட்டவனையாவது தண்டிப்பாரா?!].
இவர் என்றில்லை, வேறு எந்தவொரு கடவுளும்[இருந்தால்] பக்தர்களின் வழிபாட்டைப் பொருட்படுத்துவது இல்லை என்பதே உண்மை.
இது அல்லாவையோ, எல்லாக் கடவுள்களையுமோ இழிவுபடுத்துவதற்கான பதிவு அல்ல; அல்லவே அல்ல.
இதன் நோக்கம் நம் உள்மன உறுத்தலை வெளிப்படுத்துவது மட்டுமே.
* * * * *
காணொலி[கிளிக்குக]:
https://x.com/CopsGoneWrong/status/1861591638381867484?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1861591638381867484%7Ctwgr%5E51524c2901b77f045bc1d1830e887c805e4cf44b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fworld%2Fpakistan-forces-pushing-praying-protester-off-containers-goes-to-viral-videoiral-video].