செவ்வாய், 9 ஜூன், 2026

அன்று பொலிரோ! இன்று ஸ்பெஷல் கார்!! நாளை விமானம் ஓட்டும் நம் முதல்வர்!!!

நம் முதல்வர் அவர்கள் இதற்கு முன்பும்,  'தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக வழங்கப்பட்ட புதிய பொலிரோ(Bolero) வாகனங்களின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததோடு, பாதுகாப்பு அதிகாரிகளும் காவலர்களும் பின்னால் அடித்துப்பிடித்துக் ஓடிவர, தலைமைச் செயலக வளாகத்திற்குள் அவர் அந்தக் காரை ஓட்டி மக்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது[செய்தி]' நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசுக்காகப் புதிய விமானம் வாங்கும்போது[தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமாக விமானங்கள் உள்ளன. வி.வி.ஐ.பி.(VVIP) மற்றும் அவசரப் பயணங்களுக்காக அரசு ஒரு செஸ்னா சிட்டேஷன் வி(Cessna Citation V) ரக ஜெட் விமானத்தையும், ஒரு 'பெல்'(Bell) ரக ஹெலிகாப்டரையும் சொந்தமாக வைத்துப் பராமரித்து வருகிறது> AI] தவறாமல் அந்த விமானத்தை ஓட்டி, நம்மைப் பேரானந்தத்தில் திளைக்கச் செய்தல் வேண்டுமென்று இப்போதே அவரிடம் கோரிக்கை வைக்கிறோம்.

நம் முதல்வருக்கு நன்றி!

                                         =======================