சனி, 28 நவம்பர், 2026

தமிழ்க் கடவுள் முருகன் பெயரால் தமிழரின் உரிமை பறிக்கும் பிரதமர் மோடி!!!

திருப்பரங்குன்றம் கல்தூணில்[வெறும் ‘கல்’ தூணேதான்] தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

இது விசயத்தில் அது நடவடிக்கை எடுக்காதது தவறு என்றால், உச்ச நீதிமன்றம் அதைக் கண்டிக்கலாம்[வழக்குத் தொடுக்கப்பட்டால் மட்டும்]; தமிழ்நாடு அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நடுவணரசுக்கு ஆணை பிறப்பிக்கலாம்; அது தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தல் ஏற்புடையதல்ல.

நடுவணரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, த.நா. அரசைத் தண்டிக்கும் வகையில் அதிகப்பட்சமாக அதைக் கலைக்கவும் செய்யலாம்.

தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் கட்சி பதவி ஏற்றபின், கல்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து அந்த அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதுவும் எதிர்மறையாகச் செயல்பட்டால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, சட்ட விதிகளை ஆராய்ந்து ஒன்றிய அரசு செயல்படலாம்.

அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசுகள் தீபம் ஏற்றுவதற்கு எதிராகவே செயல்படுமாயின், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, ஒன்றிய அரசு தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்[?].

ஆனால், அவசர... அவசர... அவசரமாக, உச்ச நீதிமன்றமும் நடுவணரசும் இணைந்து தி.குன்றம் தூணில் தீபம் ஏற்றுவது, மாநில அரசுக்குரிய அதிகாரத்தை/உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

தமிழ்க் கடவுளான முருகன் பெயராலேயே, தமிழ் மக்களுக்கான[தமிழ்நாடு அரசின்] உரிமையைப் பறிப்பது, தமிழர்களின்[விதிவிலக்கு> சங்கிகள்] விருப்பத்திற்கு எதிரானது.