//திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் முறையாகப் பின்பற்றாததை, நீதிபதிகள் "ஐயோ"(Alas) என்று கூறிக் கண்டித்திருக்கிறார்கள்[செய்தி].
நவம்பர் 27, 2026 அன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, “தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய சூழலைக் கண்டு, நாங்கள் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை "ஐயோ"(Alas) என்பதுதான்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
நீதிபதிகள் தற்சார்பு இல்லாதவர்கள்; அறிவுப்பூர்வமாகச் செயல்படக் கடமைப்பட்டவர்கள். அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் பொதுமக்களின் நலன் சார்ந்தவையே அல்லாமல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புடையவை அல்ல.
எனவேதான், அவர்களின் செயல்பாடுகள் உணர்ச்சிப்பூர்வமானதாக இல்லாமல் அறிவுப்பூர்வமானது அமைதல் வேண்டும் என்கிறோம்.
உணர்ச்சிவயப்படாமல் செயல்பட வேண்டிய நம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்[அரசர்கள்?] "ஐயோ"(Alas) என்று புலம்பியிருப்பது நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது; பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
நவம்பர் 28-ஆம் தேதி(நாளை), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், முறைப்படி கார்த்திகைத் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் புரியாத புதிராக உள்ளது. இது பற்றி விமர்சிப்பது தவிர்க்கப்படுகிறது.