காமம் என்றால் என்ன?
இணையத்தில் தேடியதில்.....
‘இது ஒருவித உணர்வு; புலன் சார்ந்த இன்பத்தை அளிக்கவல்லது’ என்பன போன்ற, பொத்தாம்பொதுவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன; துல்லியமானதொரு விளக்கவுரை கிடைக்கப்பெறவில்லை.
காமம் என்பது, விந்துவை வெளியேற்றுவதற்கான ‘உந்துதல்/தூண்டுதல் உணர்ச்சி’ என்பது சற்றே பொருத்தமான உரையாகத் தோன்றுகிறது.
உந்துதல், அல்லது தூண்டுதலுக்குக் காரணமானவை என்று கீழ்க்காண்பன போன்றவற்றைச் சொல்லலாம்.
‘பெண்ணின் இளமை, கட்டழகு, கவர்ச்சி, காந்தப் பார்வை, நளினமான அங்க அசைவுகள்.....’
வயது ஆக ஆக இவை குறைந்து குறைந்து முதுமையில், பெருமளவிலோ, முற்றிலுமாகவோ இல்லாமல்போவது இயற்கையாகும்.
ஆனால், மேற்கண்டவற்றின் தூண்டுதல் இல்லாதபோதும், உடம்பில் காமம் இருந்துகொண்டுதான் இருக்கும்{காமச் சுரப்பிகள்[ஹார்மோன்ஸ்] இயக்கத்தில் உள்ளவரை}.
உந்துதல்[தூண்டுதல்] இல்லையெனினும், ஏற்கனவே மனதில் பதிந்துள்ள பெண்களின் கவர்ச்சி உறுப்புகளை மனதில் காட்சிப்படுத்தியும், ஆபாசப் படங்களை முன்னிறுத்தியும் சுயமாக விந்துவை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஆண் ஈடுபடுவதும் உண்டு.
இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது, மேற்கண்ட இளமை, கவர்ச்சி போன்றவற்றை முற்றிலுமாய் இழந்துவிட்ட முதுபருவப் பெண்களைச் சந்திக்க நேரும்போது, காமம் முற்றிலுமாய் முடங்கிப்போகும் என்பது. இது இயற்கையும்கூட.
இதற்கு விதிவிலக்கானவையும், அதிசயத்தக்கனவும், மகளிரை மருளச் செய்வனவுமான நிகழ்வுகளும் அவ்வப்போது, அல்லது எப்போதாவது சமுதாயத்தில் இடம்பெறுவது புரிந்துகொள்ளவே இயலாத புதிராக உள்ளது.
எடுத்துக்காட்டாக, அண்மைய நிகழ்வு ஒன்று[‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியாகியுள்ளது]:
தோல் சுருங்கி, தலை நரைத்து, ஒடுங்கிச் சோர்ந்த உடம்புடனும், பொக்கை வாயுடனும் காட்சியளிக்கும் 78 வயதான கிழவியை, 30 வயது மதிக்கத்தக்க, ‘குடிபோதையில் இருந்த’ இளைஞன் ஒருவன் வன்புணர்வு செய்ததைச் சொல்லலாம்.