‘நீட்’ தேர்வு மையங்களில் தேவையான அளவுக்குக் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது, தேவைக்கும் கூடுதலாகவே, பழுதுபடாத கட்புலனும், செவிப்புலனும் வாய்க்கப்பெற்ற கண்காணிப்பாளர்களை நியமிப்பது என்னும் நடைமுறைகளைப் பின்பற்றினாலே மாணவர்கள் விடைக் குறிப்புகள்[Bit] கையாள்வதையும், வெளியாட்களுடன் உரையாடுவதற்கான நுட்பமான சிறு கருவிகள் பயன்படுத்துவதையும் முற்றிலுமாய்த் தடுத்துவிட முடியும்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கத்தினர்[வடக்கே, ஆள்மாறாட்டம், சிறப்பாக எழுதிய ஒருவரின் ‘அதிக மதிப்பெண்’ பட்டியலை மந்தபுத்தி மாணவரின் பெயருக்கு மாற்றுவது போன்ற தில்லுமுல்லுகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது கவனத்தில் கொள்ளத்தக்கது] கடுமையான கெடுபிடி நடவடிக்கைகள் மூலம் மாணவர்களை நிலைகுலைய வைத்துச் சிறப்பாகத் தேர்வு எழுதவிடாமல் தடுக்கிறார்கள். இதன் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை[‘நீட்’ என்னும் பெயரில் மாநிலங்களின் உரிமையைப் பறித்தது வேறு விசயம்].
பெண்களின் துப்பட்டா நீக்கம், அணிகலன்களைத் தவிர்த்தல் போன்ற வழக்கமான கட்டுப்பாடுகள் போதா என்று மாணவிகள் ‘பிரா’ அணிந்து தேர்வு எழுதக்கூடாது என்னும் நிபந்தனை[மாணவர்களைப் பொருத்தவரை பிரச்சினை இல்லை. அவர்கள் முழு நிர்வாணமாகத் தேர்வு எழுதவும் தயாராக இருப்பார்கள். ஹி... ஹி... ஹி!!!] விதிக்கப்பட்டுள்ளதை ஊடகச் செய்தி மூலம் அறிய இயலுகிறது. https://www.indiatoday.in/india/story/neet-girl-neet-aspirant-medical-students-forced-remove-bra-innerwear-chennai-exam-centre-2376334-2023-05-08
பெண்கள் உள்ளாடை அணிந்து தேர்வு எழுதக்கூடாது என்று நிர்ப்பந்திப்பது முன்பும் நடந்திருக்கிறது. https://tamil.news18.com/news/national/neet-ug-2022-kerala-aspirants-allegedly-asked-to-remove-bras-nta-explanation-about-controversy-773724.html
இந்நிலையில், உள்ளாடை[பிரா! ஜட்டி?] கூடாது என்பதோடு, நிர்வாணமாக அமர்ந்துதான் ‘நீட்’ எழுதுதல் வேண்டும் என்று புதியதொரு கட்டுப்பாடு விதிக்கப்படக்கூடுமோ என்று மனம் அதீதக் கற்பனையில் மூழ்குவதைத் தவிர்க்க இயலவில்லை! ஹி... ஹி... ஹி!!!
அதி புத்திசாலிகள் ஆளும் நாட்டில் இவை போன்றவை மட்டுமல்ல, இன்னும் எவையெவையெல்லாமோ நடக்கவும்கூடும் என்பது அறியத்தக்கதாகும்!
* * * * *
‘A row erupted after an incident of a Chennai exam centre allegedly banning National Eligibility cum Entrance Test (Undergraduate) or NEET aspirants from wearing bras on Sunday came to the fore.’