பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த சனிக் கிழமை நடந்த அரசியல் பேரணியில் மதத்தையும் கடவுளையும் விமர்சனம்[அருகிலிருந்தவர் தடுத்ததையும் பொருட்படுத்தாமல்] செய்தற்காக முஸ்லிம் அறிஞர் ஒருவர்[மௌலானா நிகர் ஆலம்] ‘தெஹ்ரிக் இ இன்சாப்’ கட்சியினரரால்[இம்ரான்கான் கட்சி] அடித்துக் கொல்லப்பட்டார்[ஏற்கனவே, கடவுளை விமர்சித்ததற்காக இருவரைக் கொன்றிருக்கிறார்கள்] என்பது இன்றையச் செய்தி.
வெறிகொண்டு பாய்ந்த அந்தக் கும்பலிடம் சிக்கிக்கொண்ட மதகுரு நூற்றுக்கும் மேற்பட்டோரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
அவரது கடைசி மூச்சு நிற்கும்வரை அந்தக் கும்பல் அவரை அடித்துக்கொண்டே இருந்ததாம்.
இஸ்லாமியர் ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னே மதத்தையோ கடவுளையோ விமர்சிப்பது என்பது ஒரு மாபெரும் புரட்சி. அதை நிகழ்த்திக் காட்டிய ஒரு மாவீரனைக் கொன்றுவிட்டார்கள் பாவிகள்.
அவரின் உயிரைப் பறித்ததால், இவர்கள் இனி வாழ்க்கை முழுதும் துன்பமே இல்லாமல் இன்பம் மட்டுமே அனுபவித்துச் சுகித்திருக்கபோகிறார்களா?
அவரை அழித்ததற்காக இப்போதே இவர்களுக்கான இடங்களைச் சொர்க்கபுரியில் ‘ரிசர்வ்’ செய்துவிட்டாரா கடவுள்?
இஸ்லாம் மதத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பவர்கள் இவர்களே.
இனியும் இவர்களைத் திருத்துவதற்கு எவரும் முன்வரப்போவதில்லை. இவர்களின் எண்ணிக்கை புற்றீசலாய்ப் பெருகிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு பின்னர் ஒரு நாள் அமையுமேயானால், உலகிலுள்ள அத்தனைக் கடவுள் மறுப்பாளர்களையும் மத வெறுப்பாளர்களையும் கொன்று குவித்து ஆனந்த வெறிக் கூத்தாடுவார்கள் இவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
500 பில்லியன் ஆண்டுகளில் உலகம்[பூமி] அழியவிருப்பதாக அண்மையில் அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்தக் கும்பலைப் பூண்டோடு அழித்தொழிக்காவிட்டால்.....
உலகம் அழிவதற்கு 500 பில்லியன் ஆண்டுகளெல்லாம் தேவைப்படாது; சில நூறு ஆண்டுகளிலேயே இது இல்லாமல்போகும் என்பது 100% உறுதி.
https://tamil.oneindia.com/news/international/cleric-killed-in-pakistan-by-imran-khan-s-tehreek-e-insaf-party-members-for-blasphemy-510677.html?story=3
***blasphemy > தெய்வ நிந்தனை.