“எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது!”
முன்னாள் அமைச்சர்[அதிமுகவினரின் முன்னாள் தெய்வத்தின் தெய்வம் செல்வி செயலலிதா போட்ட பிச்சை]ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்[தினகரன்,June 3, 2024, 5:19 p] மூலம் தான் ஒரு பக்திமான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பன்னீரிடம் நாம் பணிவுடன் முன்வைக்கும் கோரிக்கை:
ஐயா, பன்னீர் செல்வனாரே, நீவிர் அறிவுள்ள சராசரி மனிதனாகவோ படு முட்டாளாகவோ இருப்பது உமக்குள்ள உரிமை.
நீரோ, உம்மை முட்டாள் என்று பிறர் நினைக்கும் வகையில், “நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது” என்று உளறியிருக்கிறீர்.
“வெற்றி பெறுவேன்” என்று சொன்னபோது தன்னம்பிக்கையாளராக இருந்த நீர், ஒரு மூடநம்பிக்கையாளராக மாறி, “ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில்”[‘ஒன்றிய அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்று சொல்லியிருக்கலாம்] என்று சொன்னது எப்படி?
இப்படிச் சொல்லிச் சொல்லி இப்போதைய உம்முடைய தலைவர் மோடியைப் போலவே, ஓர் உன்னதமான பக்திமானாகக் காட்டிக்கொள்வது உம்மை ஓர் உத்தம அரசியல்வாதியாக மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவா?
தொட்டதற்கெல்லாம் கடவுளைத் துணைக்கு அழைக்காமல் உங்களால் பேசவோ செயல்படவோ இயலாதா?
இயலாது என்றால்.....
அரசியலிலிருந்து விலகுங்கள்.
உங்களைப் போன்றவர்கள் விலகினால், மக்கள் இடையூறு ஏதும் இல்லாமல் சுயமாகச் சிந்திப்பார்கள்; நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.
https://www.dinakaran.com/chance_success_union_minister_madurai_o-panneerselvam/null