இந்தப் புண்ணியப் ’பாரத்’இல் தெரு நாய்கள் இல்லாத ஊரே இல்லை.
அவ்வப்போது சின்னஞ்சிறுசுகளைக் கடித்து வைப்பதோடு, கடுவனும் பெட்டையும் கலவியில் ஈடுபட்டுச் சிறுவர்களிடம் கல்லடிபடுவதும் நம் கண்களில் படும் நிகழ்ச்சிதான்.
தணியாத தாபத்துடன் சில ஆண் நாய்கள் அவற்றைச் சூழ்ந்துகொண்டு அல்லாடுவதும், அதுகளில் முன்னனுபவமும் முரட்டுக் குணமும் உள்ள ‘வஸ்தாது’[இருந்தால்] தாக்குதல் நடத்திக் கடுவனை விரட்டியடித்துப் பெட்டையுடன் புணர்ச்சி செய்வதும் உண்டு.
மனிதர்களும் தெரு நாய்களைப் போல வாழ்ந்த மிருகங்கள்தான்.
ஆறறிவு வாய்த்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மனம் பக்குவப்பட்டபோது உருவான சமூக அமைப்பில், அடுத்தவனின் அந்தரங்கச் சுகத்தைத் தட்டிப் பறிப்பது குற்றம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆயினும் என்ன, காட்டுமிராண்டிக் குணங்களிலிருந்து மனிதர்கள் முற்றிலும் விடுபடாததால்.....
பொது இடங்களில், கட்டிய கணவன் உடனிருக்கும்போதே, அவனை அடித்து வீழ்த்திப் பெண்ணைக் கடத்திச்சென்று வன்புணர்வு செய்யும் அட்டூழியங்கள் இன்றளவும் தொடர்கின்றன.
கணவனுடன் கொஞ்சல் குலாவுதல் செய்யாத பெண்களுக்கே இந்தக் கதி என்றால், கடற்கரை மணல் பரப்புகளிலும், பூங்காக்களின் ஒதுக்குப்புறங்களிலும், ஆற்றங்கரைப் புதர் மறைவிலும் நகர்ப்புற மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்கோடிகளிலும் காதலனுடன் காமக்களியாட்டங்களில் ஈடுபடும் பெண்கள் கயவர்களால் வன்கொடுமைகளுக்கு உள்ளாவது அவ்வப்போதைய நிகழ்வாகிப்போனதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
பகலோ இரவோ, பொது இடமோ மறைவிடமோ ஆணும் பெண்ணும் இணைந்து, சுதந்திரமாகக் காதல் பண்ணுவதற்கு[வரம்பு?]த் தேவையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பது நம் அரசியல்வாதிகளில் சிலரின் கோரிக்கையாக உள்ளது.
அரை நிர்வாணக் கோலத்தில் தனக்குத்தானே சவுக்கடி கொடுத்தல், செருப்பில்லாமல் நடத்தல், உண்ணாவிரதம்[அம்மணமாக? ஹி... ஹி... ஹி!!!] இருத்தல் என்று விதம் விதமான போராட்டங்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
போராட்டங்களால் எவ்விதப் பயனும் இல்லை[எத்தனை எத்தனைக் காதல் ஜோடிகள்! அத்தனைக்கும் அரசாங்கம் பாதுகாப்புத் தருவது நடைமுறைச் சாத்தியமே இல்லை. கன்னி வேட்டையில் ஈடுபடும் ‘காலி’களை முற்றிலுமாய் ஒழிப்பதும் அத்தனை எளிதல்ல].
இதற்கு மாறாக, அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து, கண்ட கண்ட இடங்களில்[மேற்கண்டவாறு] காதல் என்னும் பெயரில் சரசசல்லாபத்தில் ஈடுபடும் காதல் ஜோடிகளிடம் கீழ்க்காணும் கோரிக்கையை ஏற்குமாறு வற்புறுத்தலாம்[அரசும் சட்டம் இயற்றலாம்].
கோரிக்கை:
“காதல் பண்ணுவதோ, காமச் சுகம் அனுபவிப்பதோ எதுவாயினும் நான்கு சுவர்களுக்குள் செய்யுங்கள்”