//நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தக் காலத்தில் அம்பேத்கர் என்று கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு மாறாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்தார்[புதிய தலைமுறை]//
இஸ்லாமியர்கள் ஒரு நாளில் ஐந்து தடவைகள்தான் ‘அல்லா’வின் பெயர் சொல்லி வழிபாடு நிகழ்த்துகிறார்கள். நம் ‘ஆன்மிகப் பேரொளி’ அமித்ஷாஜியோ ஒரு நாளில் ஒரு முறை அல்ல, ஒன்பது முறை பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர் சொல்லி மனம் நெகிழ்ந்து நெக்குருகுகிறார்[செவிவழிச் செய்தி].
பகவானை மக்கள் மறந்துவிடாமலிருக்க, தலைவர் மோடியுடன் இணைந்து நகர்ப்புறம் மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெல்லாம் தமக்கான சுகபோகங்களைத் துறந்து பரப்புரை செய்கிறார் அமித்ஷு.
இவரின் ஆன்மிகப் பணியைப் பெரிதும் மதித்துத் தனக்கு மிக அருகிலேயே சொர்க்கத்தில் இவருக்காக ஓரிடத்தைப் பகவான் முன்பதிவு[Reserve] செய்திருக்கிறார்.
ஆகவே, “எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத் தாமதம் செய்யாமல் சொர்க்கம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று அருட்பெருஞ்செல்வர் அமித்ஷாஜியை வேண்டுகிறோம்!
* * * * *