தேடல்!

‘பூக்குழி’ எனப்படும் தீக்குண்டம் மிதிப்பது, கடவுளின் அருளாசி தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்குப் பக்தர்கள் கையாளும் தந்திரம்!!!

Jan 4, 2017

‘கள்ளப் புணர்ச்சி’ .....கணினியுகக் குடும்பக் கதை!

[இது நடந்த கதையல்ல; இனி நடக்கவிருக்கும் கதை!]


“மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை.”
“நீங்க  தப்பு ஏதும் பண்ணலியே மாமா?”

“என் மகள் பண்ணின தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன்.”

“மன்னிப்பெல்லாம் வேண்டாம். ஏன்னா, கல்யாணத்துக்கு முந்தி நானும் தப்புப் பண்ணினவன்தான். அதை நானே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். இது இண்டர்நெட் யுகம். ‘அது’ விசயத்தில் தப்புப் பண்ணாம வாழ்றது ரொம்பச் சிரமம். அதனாலதான், உங்க மகளின் கற்பு பத்திக் கவலைப்படாம அவளைக் கட்டிகிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தருக்கொருத்தர் துரோகம் பண்ணாம வாழ்ந்தா போதும்னு நினைக்கிறவன் நான்.”

“அது உங்க பெருந்தன்மை. அந்தப் பெருந்தன்மையை என் மகள் மறக்காம இருந்திருந்தா உங்க வீட்டு மாடியில் குடியிருந்த அந்தப் பொறுக்கியோட ஓடியிருக்க மாட்டா.....”

“..........”

“ஓடிப்போனவ, அவன் ஒரு அயோக்கியன்னு தெரிஞ்சி திரும்பி வந்துட்டா; இப்போ எங்களோடதான் இருக்கா. உங்ககிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன், பெரிய மனசு பண்ணி அவளை நீங்க ஏத்துக்கணும் மாப்பிள்ளை.”

“ஏத்துக்க நான் தயார்தான். ஆனா, அவ மறுபடியும் இன்னொருத்தனோட ஓடிப்போக மாட்டாங்கிறது என்ன நிச்சயம் மாமா?”

“அவகிட்ட சத்தியம் வாங்கிடலாம் மாப்பிள்ளை.”

“காமம் ரொம்ப ரொம்பப் பொல்லாதது. இது  விசயத்தில் சத்தியமெல்லாம் நிற்காது மாமா. உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஒரு பொண்ணு, புருசன் இருக்க இன்னொருத்தனோடு ஓடிப் போறான்னா அதுக்குக் காரணம் அவ புருசனேதான். அந்த விசயத்தில் அவன் அவளைத் திருப்திபடுத்தாததுதான் காரணம். உங்க மகளை நான் சரியாப் புரிஞ்சிக்கல. தப்பு என் மேலேதான் மாமா. ஆனா ஒன்னு.  ‘போதாது’ன்னு ஜாடைமாடையா அவ சொல்லியிருந்தாக்கூட, வயாகரா, நயாகரா, ஆயின்மெண்ட்டு, நைட்பில்ஸ், ‘ரப்பர்பேண்ட்’னு எதையாவது உபயோகிச்சி அவளோட எதிர்பார்ப்பை நிறைவேத்தியிருப்பேன்.”

“ஒரு பெண்டாட்டி, புருசன்கிட்டே இதையெல்லாம் சொல்ல முடியுமா மாப்பிள்ளை?”

“காலம் ரொம்பவே மாறிடிச்சி. ஆண்களைப் போலவே பொண்ணுகளும் எல்லார்த்தையும் தெரிஞ்சி வெச்சிருக்காங்க. மருத்துவர்கிட்டேயும் வக்கீல்கிட்டேயும் மட்டுமல்ல, ‘இது’ விசயத்தில் புருசன் பெண்டாட்டிக்குள்ளேயும் ஒளிவுமறைவு இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். உங்க மகள்கிட்டே நேரடியாப் பேசுவேன். இனியும் நல்லதே நடக்கும்னு நம்புவோம். நீங்க கிளம்புங்க. ஊருக்குப் போனதும் அவளை, அதான்... என் பெண்டாட்டியை அனுப்பி வையுங்க மாமா.”

“மாப்பிள்ளை நீங்க...நீங்க...”

”நான்...நான் ஒரு மனுசனா வாழ நினைக்கிறவன்.  அவ்வளவுதான். போய்வாங்க மாமா.” 
===============================================================================

14 comments :

 1. Replies
  1. ஆனாலும், ‘விசயம்’ உள்ள ஆள்தான்.

   நன்றி தனபாலன்.

   Delete
 2. இப்படியும் மாப்பிள்ளை ?

  ReplyDelete
  Replies
  1. வருங்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் இருக்கக்கூடும்!

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 3. இவ்வளவு விவரமான மாப்பிள்ளை முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்துக்க வேண்டாமா :)

  ReplyDelete
  Replies
  1. பெண்டாட்டியை அப்பாவிப் பொண்ணுன்னு நினைச்சிட்டாரோ என்னவோ!

   நன்றி பகவான்ஜி.

   Delete
 4. அருமையான ஆய்வுக் கட்டுரை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

   Delete
 5. பலரும் பேசத் தயங்கும் உண்மைகளை கதை வழியாக சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. பலநாள் தயக்கத்திற்குப் பிறகு கொஞ்சமேனும் பயன்படும் என்ற நம்பிக்கையில் எழுதினேன்.

   நன்றி முரளி.

   Delete
 6. உண்மைகளை சொன்ன கதை!

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த தயக்கத்துடன்தான் எழுதினேன்.

   நன்றி சுரேஷ்.

   Delete
 7. காமம் ரொம்பப் பொல்லாதது!

  ReplyDelete
  Replies
  1. மிக மிகப் பொல்லாதது.

   நன்றி பாரதி.

   Delete