- உடம்பில் தூசு படாமல், சின்னஞ்சிறு சிராய்ப்புகூட இல்லாமல், கத்தி ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், யுத்தம் ஏதும் நிகழ்த்தாமல் நம்மால் ‘தனித் தமிழ்நாடு’தனைப் பெற்றிட முடியும்.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
வெள்ளி, 27 ஜனவரி, 2017
ரூ5.5 கோடியில் தனித் தமிழ்நாடு!
எப்படி? எப்படி? எப்படி?
“ஏழுமலை வாசா! வெங்கடேஸ்வரா! 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை உனக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்” என்றிப்படி, இன உணர்வு கொண்ட அத்தனை தமிழர்களும் [ஏழுமலையானிடம்] கோரிக்கை வைத்தால் போதும்[ஆகும் செலவை இன உணர்வுள்ள அத்தனை தமிழர்களும் பகிர்ந்துகொள்ளலாம்]. அவர் நம் கோரிக்கையை நிறைவேற்றுவார்.
நாம் தனித் தமிழ்நாடு பெறுவது 100% உறுதி.
இதை எப்படி நம்புவது என்கிறீர்களா?
செய்தியின் சாரம்: #ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தெலுங்கானா மாநிலம் உருவானால்[ஏழுமலையான் உருவாக்கிக் கொடுத்தால்] திருப்பதி ஏழுமலையானுக்கு 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்குவதாக நேர்ந்துகொண்டார்[போராட்டக்காரர்கள் பலரின் உயிர்த் தியாகமும் இவரின் உண்ணாநோன்பும் பலன் தரவில்லை என்று நினைத்தார் போலும்!]. கோரிக்கை நிறைவேறியதால், நேர்ந்துகொண்டபடி காணிக்கையை வழங்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு 5.5 கோடியாகும்#
5.5 கோடி ரூபாய்க்காக ஏழுமலையான் ஒரு மாநிலத்தை உருவாக்கித் தந்தார் என்றால், அதே தொகைக்கு[கூடுதல் காணிக்கை குறித்துக் கலந்தாலோசிப்போம்] நமக்குத் ‘தனி நாடு’ பெற்றுத் தருவார் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================
7 கருத்துகள்:
- பதில்கள்
முந்தைய பதிவு, தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் வெளியாகாமல் மிகவும் தாமதமாகப் பின் வரிசையில் இடம்பெற்றதால் பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது[பிரச்சினைக்குரிய தலைப்பு காரணமோ என்னவோ அடிக்கடி இது நேர்கிறது].
நீக்கு
இதனால், முந்தைய பதிவையே தலைப்பை மாற்றி வெளியிட்டுத் தமிழ்மணத்தில் இணைத்தேன். தமிழ்மணமும் இணைத்துக்கொண்டது. ஆனாலும், தமிழ்மணப் பட்டியலில் உள்ள பதிவுகள் நகர்ந்து புதிய பதிவுகளுக்கு இடம்தராமல் உள்ளன. பட்டியலில் இப்பதிவு இன்னும் இடம்பெறவில்லை; பதிவுக்கான ‘பார்வை’ எண்ணிக்கையும் மிக மிகக் குறைவாகவே உள்ளது.
இப்படிச் சில இடர்ப்பாடுகள்[எனக்கு மட்டுமா?] அடிக்கடி நேர்வதால் பதிவு இடுவதில் சலிப்பு நேர்ந்துள்ளது.
ஏதோ நடந்துவிட்டுப் போகட்டும் என்னும் மனநிலையில் நான்.
நன்றி தனபாலன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)