வியாழன், 12 ஜனவரி, 2017

எட்டி உதைத்த ராமகிருஷ்ணக் கடவுளும் உதைக்கவிருக்கும் ஜக்கி வாசுதேவும்!!!

அழகான தாடி மீசையுடன் வகைவகையாய் ஆடை உடுத்து, அசத்தும் சொல்லாடல் மூலம் ஆன்மிகம் வளர்க்கும் ஜக்கி வாசுதேவ், இன்றைய ‘தி இந்து’[12.01 2017] நாளிதழில் ‘விவேகானந்தரைக் கொண்டாட ஒரு நாள்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார்.
கட்டுரையின் நோக்கம், கடவுளின் ‘இருப்பு’ குறித்துக் கண்ட கண்ட சாமியார்களிடமெல்லாம் கேள்விகள் கேட்டு அலைந்துகொண்டிருந்த விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து ஞானம் பெற்ற கதையை[!]ச் சொல்வதே ஆகும்.

“கடவுள்! கடவுள்!” என்கிறீர்களே, அதன் பொருளென்ன? அதற்கு சாட்சி என்ன?” என்று ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்டாராம் விவேகானந்தர். “நானே சாட்சி இதைவிட உனக்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? நான் இங்கு இருக்கிறேன்” என்பது  மகான் பரமஹம்சரின் பதில்.

முற்றிலும் எதிர்பாராத இந்தப் பதிலைக் கேட்டதும் நரேன் எனப்படும் விவேகானந்தரால் வாதிட முடியவில்லை என்கிறார் நம் ‘சத்குரு’ ஜக்கி.

‘சாட்சி’ என்கிறார்; ‘நானிங்கு இருக்கிறேன்’ என்கிறார் ராமகிருஷ்ணர். பொருள் புரியாமல் நாம் திகைக்கிறோம்.

திகைப்பிலிருந்து நம்மை விடுவிக்கும் முகமாக, தொடர்கிறது ஜக்கியின் கதை.

“கடவுள்! கடவுள்! என்று பேசுகிறீர்களே, உங்களால் அதை[’அதை’ என்றுதான் சத்குரு சொல்கிறார்]க் காட்ட முடியுமா?” என்றார் விவேகானந்தர்.

“உனக்கு அதைக் காணும் துணிச்சல் இருக்கிறதா?” என்றார் ராமகிருஷ்ணர்.

“இருக்கிறது. காட்டுங்கள்” என்றார் விவேகானந்தர்.

கொஞ்சமும் எதிர்பாராத வகையில் தனது கால்களை விவேகானந்தரின் நெஞ்சில் வைத்தார் குரு. குருவின் ஸ்பரிசம் நெஞ்சுப் பகுதியில் பட, சொல்லொணாத அனுபவத்தை உணர்ந்தார் விவேகானந்தர்; அந்த ஆனந்த நிலைக்குப் பொருள் தெரியாமல் தவித்தார்; கண்களில் கண்ணீர் மல்க வார்த்தைகளின்றி உறைந்தார்.....

இப்படியாக, விவேகானந்தர் பெற்ற சுகானுபவத்தையும், குருவுக்கு அவர் பெருமை சேர்த்த வகையினையும் விவரித்துச் செல்கிறார் ஜக்கி.

இந்தக் கதையின் மூலம் ராமகிருஷ்ணரைக் கடவுள் ஆக்கியிருக்கிறார் அவர்.

அவர் கடவுள்  என்றால், புற்று நோய்க்கு ஆளாகி அந்தக் கடவுள் செத்துப் போனாரே, அது ஏன் என்னும் கேள்விக்கு சத்குரு ஜக்கி பதில் சொல்வாரா?

விவேக்கை எட்டி உதைத்து இன்பசாகரத்தில் மூழ்கடித்த அவர் கருணை வடிவான கடவுள் ஆயிற்றே,  இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம்...பல்லாயிரம் பேருக்கு இந்தச் சுகத்தை வழங்கினார்? ஜக்கியிடம் புள்ளிவிவரம் உள்ளதா? 

ராமகிருஷ்ணர் ஒரு சராசரி மனிதனாக உணவுண்டு, உறங்கி, சிறுநீர் பெய்து, மலம் கழித்து வாழ்ந்தவர். அப்புறம் எப்படி அவர் கடவுளானார்?

அவருக்கும் இரண்டு கைகள் உண்டுதானே? தொட்டிருக்கலாம்; தடவியிருக்கலாம். நெஞ்சில் கால் பதித்தது ஏன்?

இப்படி, இன்னும் எத்தனையோ கேள்விகளை நம்மால் கேட்க முடியும். பதில் சொல்ல ஜக்கி தயாரா?

“ராமகிருஷ்ணர் எட்டி உதைத்தார். உதைபட்டவருக்கு இன்பலோகம் தெரிந்தது என்று கதை சொல்லும் ஜக்கி வாசுதேவ்.....

‘கடவுள்...கடவுள்!’ என்கிறீர்களே, அந்தக் கடவுளை உங்களால் காட்ட முடியுமா?” என்று எவரேனும் கேட்டால், கேட்டவரை உதைப்பார்; கேட்போரையும் உதைப்பார்;  காலமெல்லாம் எட்டி எட்டி எட்டி உதைத்துக்கொண்டே இருப்பார். 

உதைபடுவது தமிழனுக்குப் புதிய அனுபவம் அல்லவே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கீழ்க்காணும் முகவரிகளில் இந்தக் குருவையும் சீடரையும் பற்றிக் கூடுதல் தகவல்களை அறியலாம். தவறாமல் படியுங்கள்.

http://kadavulinkadavul.blogspot.com/2012/08/58.html
http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_9.html
http://kadavulinkadavul.blogspot.com/2016/03/blog-post.html

10 கருத்துகள்:

  1. உதைபடுவது தமிழனுக்குப் புதிய அனுபவம் அல்லவே!

    கடவுளாரிடம் தமிழன் நல்லாக உதைபடுவான் :)
    கடவுளாரிடம் உதை வாங்குவதைவிட வேறு ஏதாவது பாக்கியம் தமிழனுக்கு உண்டா ஐய்யா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழனைப் போல் தரணிதனில் வேறு இனம் கண்டதில்லை.

      நன்றி வேகநரி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. சிரிப்பின் மூலம் என் எழுத்தை அங்கீகரித்திருக்கிறீர்கள்.

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. இதென்ன புது கதையா இருக்கே !உதைப்பட்டவர்கள் கண்ணில் கழுதைதான் தெரியும் ,கடவுள் எப்படி தெரிவார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே கழுதையாக வந்து உதைத்தாரோ என்னவோ!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
    2. ஒரு உண்மையான பக்தன் கூட உங்க அளவு கடவுளை பற்றி சிந்திக்க மாட்டான் பரமு. இதே போல நிறைய எழுதுங்கள்.

      நீக்கு
    3. ‘விதை நெல்’ களம் காலியாக இருக்கிறதே? ஏதாவது விதையுங்கள்.

      வருகைக்கும் உங்களின் உளமார்ந்த பாராட்டுக்கும் நன்றி சுவாமி.

      நீக்கு
  4. இந்தப் போலி சாமியார்களுக்கு மக்கள் நிச்சயம் நல்லபாடம் கற்பிக்க வேண்டும். நமது வலைத்தளம் : சிகரம்

    பதிலளிநீக்கு
  5. நன்றி பாரதி.

    சிகரத்தில் நீங்கள் எழுதும் பதிவுகள் தரமானவை.

    தொடர்ந்து எழுதுங்கள். சிகரம் தொடுவீர்கள்.

    பதிலளிநீக்கு