'சுயசுகம்' பெறுதலும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறார்கள் பாலுணர்வு மருத்துவர்கள். மாதத்திற்கு 4-7 முறை விந்துவை வெளியேற்றுபவர்களைவிடவும், மாதத்தில் 21 முறை[!!!] வெளியேற்றுபவர்களுக்குப் பிராஸ்டேட் புற்று வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
பாலுறவால் மிகப் பல நன்மைகள் விளைவதாக ஆய்வாளர்கள் வலியுறுத்துவதைப் பார்க்கும்போது, பாலுறவு கொள்ளாமல் வாழ்பவர்கள் இருப்பார்கள் எனின், 'மேற்குறிப்பிடப்படும் நன்மைகளை இவர்கள் இழப்பார்கள் அல்லவா?' என்னும் கேள்வி எழுகிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு[MedicalNewsToday] முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன[https://www.medicalnewstoday.com/articles/326518]. அதன் சாராம்சம்:
போதுமான அளவுக்கு உறவு கொள்வதில்லை என்பதாலோ, நீண்ட காலம் இந்த அனுபவத்தைப் பெற்றிடவில்லை என்பதாலோ தீங்கு ஏதுமில்லை[There is no right amount of sex to have, and not having sex for a long time should not have negative side effects] என்பதே அந்த முடிவாகும்.
'இதை'த் தவிர்த்தவர்கள் பலரும் மன நிறைவுடனேயே வாழ்ந்திருக்கிறார்கள்[Many people enjoy a full and satisfying life without ever having sex].
அமெரிக்காவில், 17,744 பேரிடம் கருத்துக் கேட்டறிந்ததில், ஓர் ஆண்டில், 15.2% ஆடவரும், 26.7% மகளிரும் உடலுறவு கொண்டதில்லை என்கிறார்கள்.
5 ஆண்டுக்காலம் இது இல்லாதிருப்பவர்களின் விழுக்காடு ஆண்கள்: 8.7%, பெண்கள் 17.05%.
இது விசயத்தில் தீவிரம் காட்டுபவர்களைப் போலவே, ஈடுபாடு இல்லாதவர்களும்கூட மகிழ்ச்சியுடன்தான் வாழ்கிறார்களாம்.
மேற்கண்ட இருவகையான முடிவுகளை அறிந்த நிலையில், 'நம் மக்கள் எதை, எப்படித் தேர்வு செய்கிறார்கள்?' என்னும் கேள்வி வாசிப்போர் மனங்களில் எழுவது இயல்பே.
நம் பதில்:
மனம் விரும்பும் வகையில் உறவு கொள்வதற்கான வாய்ப்புள்ளவர்கள் முதலாவதையும், வாய்ப்புகளைத் தேடித் தேடித் தேடி அலைந்தாலும் கொடுப்பினை இல்லாதவர்கள்[!?] இரண்டாவதையும் தேர்வு செய்கிறார்கள்!
ஹி...ஹி...ஹி!!!
====================================================================================
https://www.medicalnewstoday.com/articles/326518
Medically reviewed by Valinda Riggins Nwadike, MD, MPH — Written by Zawn Villines on July 21, 2021
* * *
அமேசானில் 'என் பக்கம்['பசி'பரமசிவம்] செல்ல.....
https://www.amazon.com/author/haipasi