*'ஹைதி' தீவில் வாழும் மக்கள், நிர்வாணமாகச் சேற்றில் புரண்டு 'காதல்' கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்[நிர்வாணமா புரளணும்னா எங்கேயும் புரளலாம். எதுக்குச் சேறு மோரெல்லாம்?].
*'ட்ரோபிரியாண்டர்ஸ்' என்னும் இந்த மக்கள் ஜெனீவா அருகில் உள்ள ஒரு தீவில் வசிக்கிறார்கள். இங்கே பெண்கள் மேலாடை உடுத்தத் தேவையில்லை[அதென்ன, மேலாடை மட்டும்?!].
*ஜெனீவாவில், 7 வயதிற்குப் பிறகு ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளுடன் பழக அனுமதிப்பதில்லை, இது அங்கு வாழும் 'பாப்புவா' என்னும் பழங்குடி மக்களிடம் காணப்படும் வழக்கமாகும். அந்தப் பத்து ஆண்டுகளும் அவர்கள் பெண்களுடன் பாலுறவு கொள்வதைத் தடுக்க, அவர்களுடைய பிறப்புறுப்புகள் துளையிடப்பட்டு, தோல்கள் பிய்க்கப்படும்[அய்யய்யோ பாவம் ஆண்கள்!].
*ஆண்களின் பிறப்புறுப்பின் நுனி வெட்டப்பட்டு, அதிலிருந்து சொட்டும் ரத்தத் துளிகளை நெருப்பில் விழச் செய்தால், அந்த ஆண்கள் மனத் தூய்மையுடன் வாழ்வார்கள் என்னும் நம்பிக்கை ஆஸ்திரேலியாவின் Mardudjaraa Aborigines என்னும் மக்களிடம் உள்ளது[முழுசையும் வெட்டிட்டா, சுத்தச் சன்னியாசி ஆயிடுவாங்களே?!].
*Mozambique என்னும் தீவில், எங்கேயும் எப்போதும் யாரும் எவருக்கும் முத்தம் தருதல் கூடாது[கிழடுகளுக்கு மட்டும்னு சட்டம் போட்டிருக்கலாம்].
*தென் பசிபிக் கடலுக்கு அருகில் உள்ள 'மங்கையா' என்னும் தீவில் ஆண்களுக்கு 'வயதான' பெண்கள் பாலுறவுக் கலை கற்றுத் தருவது வழக்கத்தில் உள்ளது['வயசுக்கு வந்த' பெண்கள் என்பதைத்தான் 'வயதான' பெண்கள் என்று தவறுதலா இப்படிச் சொல்லிட்டாங்களோ?!].
*இந்தோனேசியாவில் ஒரு சாரார் 'pon' எனப்படும் கொண்டாட்டம் நடத்துகிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தில், ஓர் ஆண் தன் இணையைத் தவிர்த்து, பிற பெண்களுடன் பாலுறவு கொள்வது கட்டாயம்[மிக நல்ல சட்டமய்யா!].
*கம்போடியாவில் உள்ள 'க்ரேயுங்க்' பழங்குடி மக்கள் பெண்கள் விவாகரத்துச் செய்வதை அனுமதிப்பதில்லை. அதனால், மணம் புரியவிருக்கும் ஆணுடன் ஒரு நாள் முழுவதையும் தனிமையில் கழித்திட வேண்டும்[ஒரு நாளில் முழுசாத் தெரிஞ்சிக்கவும் புரிஞ்சிக்கவும் முடியுமா?]
=========================================================================
குறிப்பு: அடைப்புக்குள்[ ] அடியேனின் சந்தேகங்கள்!
உதவி: https://www.seithipunal.com/life-style/craziest-sexual-customs-around-the-worldwide