செவ்வாய், 5 அக்டோபர், 2021

இதைச் செய்தது 'குமுதம்' வார இதழ்தான்!!!


ஒப்பற்ற தமிழுணர்வும் பன்மொழி அறிவும் வாய்க்கப்பெற்றவரும், தனித்தமிழ் இயக்க வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவருமான 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணரின் பேத்தி வறுமையின் பிடியில்! அவர், உதவி கேட்டுப் பிறரிடம் கையேந்தினார் என்றால் நம்ப முடிகிறதா?

பெற்ற மகனால் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு, அரசு நூலக வேலையையும் இழந்து, வெறும் ஆயிரம் ரூபாய் வருமானத்தோடு[முதியோருக்கு அரசு வழங்கும் உதவித்தொகை], வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடும் பரிதாப நிலையில் அவர். 

'ராஜகோபாலன்' என்னும் பெருந்தகையாளரிடமும் கையேந்திக் கண்ணீர் சிந்தி நின்ற அவருக்குத் தன்னால் ஆன உதவியைச் செய்ததோடு, அவரின்[பாவாணரின் பேத்தி] துயர நிலை குறித்துத் தனக்குரிய சமூக வலைதளத்திலும் எழுதினார் அவர். விளைவு.....

அவருக்குப் பலரும் உதவி செய்கிறார்கள். அமைச்சர் தென்னரசு அவர்கள் அவருக்கு வேலை தருவதாக உறுதியளித்ததோடு, குடிசைமாற்று வாரியத்துக்கு வருமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இத்தகவலை, பாவாணர் பேத்தி['ரச்சேல் ஜன்னி'] குமுதம்('தெக்கூர் அனிதா பேட்டி') நிர்வாகத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வை[குமுதம் இதழில்]ப் பதிவு செய்தது குமுதம். இதன் மூலம் தமிழுணர்வாளரை மதிப்பதிலும், மனித நேயம் போற்றுவதிலும் தனக்குரிய பங்கைச் செலுத்தியிருக்கிறது அந்த முன்னணி வார இதழ்.

தமிழ் வாசகருலகம் குமுதத்தைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.

வாழ்க குமுதம்! நாளும் வளர்க அதன் விற்பனை!!


https://www.kumudam.com/magazines/open_magazine/687