பாலியல் தொழிலில் தாய்லாந்து பிரபலம் ஆனதற்குப்[இந்த அவப்பெயரைப் போக்கும் முயற்சியில் தாய்லாந்து அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது என்பது கூடுதல் செய்தி] பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தலையாயக் காரணங்களாகக் கீழ்க்காண்பவை அறியப்படுகின்றன.
*இந்தத் தொழிலில் ஈடுபடும் தாய்லாந்துப் பெண்கள், நெஞ்சில் வஞ்சனை சிறிதுமின்றி, வாடிக்கையாளரைத் திருப்திபடுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.
*எந்தவொரு இடையூறும் இல்லாமல்[நம் ஊர்களில் போல, காவல்துறையினரின் திடீர் 'ரெய்டு'; தொழில்காரிகளையும் வாடிக்கையாளரையும் வரிசையில் நிற்கச் செய்து ஊர்வலம் நடத்துதல் எல்லாம் இல்லை] பாலியல் உறவினைத் தேடிக்கொள்ள வாய்ப்புக்கள் இங்குக் கிடைக்கின்றன. தாய்லாந்து நாட்டுச் சட்டம், பாலியல் தொழிலை அனுமதிக்காத நிலையிலும், சுற்றுலாப் பயணிகளுக்கான சலுகையாக இது கருதப்படுகிறது.
*இயல்பான வாழ்க்கைக்குரிய ஓர் அம்சமாகத்தான் இது மதிக்கப்படுகிறது இந்த நாட்டில்.
*தாய்லாந்து அழகான நாடு, அசத்தும் பேரழகுச் சுந்தரிகள் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்[படம்] என்பது இங்கு இந்தத் தொழில் பிரபலம் அடைந்ததற்கான முக்கியக் காரணம் ஆகும்.
*நிரந்தர வருமானத்திற்கு நம் நாட்டில் டாஸ்மாக்! தாய்லாந்தில் பாலியல்!!
*இந்தத் தொழிலுக்கென்றே, தெற்குத் தாய்லாந்தின் 'புகெட்', 'கிராஃபி' போன்ற அழகான கடற்கரைகளுக்கு அழகழகான பெண்களை அழைத்துவந்து விற்பனை செய்வது பொதுவான நிகழ்வாக உள்ளதாம்.
* * *
கிறுகிறுக்க வைக்கும் ஒரு கொசுறுச் செய்தி:
#தாய்லாந்து மன்னருக்குக் 'கொரோனா' தொற்றியது. மற்றவர்களைப் போலவே அவரும், (ஜெர்மனியில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றினை முழுமையாக வாடகைக்கு எடுத்துத்) தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாராம்[31.03.2020 செய்தி]. எப்படி?
வழக்கமாகத் தனக்குப் பணிவிடை செய்யும் வேலையாட்களுடனும், இருபது அழகிகளுடனும்!#
==========================================================================
பதிவு, எனக்கான நடையில் வடிவமைக்கப்பட்டது.
உதவி:
https://tamil.lifie.lk/2020/01/25/sexual-pleasure-in-thailand-trave/