அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 6 நவம்பர், 2021

அவர்களா இவர்களா, உண்மைத் தமிழர் யார்?


தமிழ்நாட்டில், கொஞ்சமும் தமிழ்ப் பற்றோ, இனப்பற்றோ இல்லாமல் பிழைப்புக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகள், பிள்ளைகள் ஆங்கில வழியில் கல்வி கற்பதையே பெருமையாகக் கருதும் பெரும்பான்மைப் பெற்றோர்கள், தமிழால் வயிறு வளர்த்தாலும் தமிழைச் சீரழித்துச் சிதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ஊடகர்கள் போன்றோரின் எண்ணிக்கை  நாளும் இங்கு அதிகரிப்பதை எண்ணி எண்ணி நாம் மனம் வருந்தியிருக்கும் நிலையில், 'quora.com' தளத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதற்கான பதில்களும் நம் சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்துள்ளன.

வாசியுங்கள்; சிந்தியுங்கள்.

கேள்வி:

'இலங்கைத் தமிழரைக் கண்டால் பொறாமை ஏற்படுவது ஏன்?' -இது, 'quora' கேள்வி.

பதில்கள்:

*இரா கலைவாணன், சிங்கப்பூர் கட்டுமான துறையில் வாகன ஓட்டுநர் (2014-தற்போது)

26 நவ., 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

'ஒரு தமிழனாக இதை சொல்ல வெட்கப்படுகிறேன்….

ஈழத்தமிழர்களிடம் நான் பெரிதும் பொறாமைப்படுவதற்கும், குறிப்பிட்டுக் கூறவும் ஒன்று உள்ளது. அது.....

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்களிடம் உள்ள மொழி ஆளுமை. பாடசாலை செல்லும் சாதாரண மாணவனிடம் ஒருபேட்டி எடுத்தீர்கள் என்றால், பத்தில் ஒன்று, இரண்டு ஆங்கிலச் சொற்களே கலந்து பேசுகிறார்கள். அதே நேரம்,  தமிழ்நாட்டு மாணவர்களிடம் பாருங்கள் அதற்கு நேர் எதிராக இருக்கும்.

அவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிட்டாமையால் மேலும் விவரிக்க முடியவில்லை.

நன்றி…'

25.2ஆ பார்வைகள்331 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்6 பகிர்வுகளைப் பார்வையிடுக

*Ananthasegaram Rajasegaram, தனியார் நிறுவனங்கள் (1975-2019)-இல் முன்னாள் தமிழ்

2 அக்., 2020 அன்று பதில் அளிக்கப்பட்டது

'இலங்கை/ ஈழத் தமிழர் தாய் மொழி தமிழ்( இந்தியத் தமிழரிடம் அது இல்லை),

எங்கும் போனால் -( தமிழர்/ ஈழத்தமிழர்) என்பார்கள் ( இந்திய தமிழர் அப்படி இல்லை

ஐரோப்பாவில் 250 கோவில்கள்(தமிழ்) உண்டு, யார் கட்டினார்கள்? ஈழத்தமிழர்கள்.

இந்திய அரசாங்கம் 63 கோடிப் பணத்தை யேர்மனியில் கொடுக்கிறது சமஸ்கிருத மொழிக்கு.

பாவப்பட்ட மக்கள் பணம் - வீணாகின்றது.

பிரான்சு, பாரிஸ் நகரத்தில்  தமிழ்ப் பாடசாலைகள் உள்ளன[அரசாங்கப் பாடசாலை…அரசாங்கம் கொடுத்துள்ளது)

4.7ஆ பார்வைகள்95 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்2 பகிர்வுகளைப் பார்வையிடுக

*ஸ்ரீநிவாஸராகவன் ஸ்ரீதரன், முதுநிலைப் பட்டம் நிதி, பட்டயக்கணக்கு கழகம் (1975)

27 நவ., 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

'பொதுவாக நான் கண்டவரையில்,

1.இலங்கைத் தமிழர்கள் (யாழ்ப்பாணத்தமிழர்கள்) மென்மையானவர்கள். (நமக்கு அந்த மென்மை வரவில்லையே என்னும் பொறாமை)

2.அவர்களது இலக்கணச் சுத்தமான தமிழ்ப் பேச்சு என்னைக் கவர்ந்த ஒன்று. (இந்தியத் தமிழர்கள் பேசுவதெல்லாம் அவர்களின் தமிழுக்கு கால் தூசு பெறாது என்னும் பொறாமை)

3.மிகவும் புத்திசாலிகள், உலகெங்கும் சென்று, உழைத்துத் தங்களைப் பதித்துக்கொண்டவர்கள்(இந்தியத் தமிழர்கள் அந்த மாதிரி ஒரு பதிவை இன்னமும் செய்து கொள்ளவில்லை என்னும் பொறாமை).

4.இலங்கையில் நடந்த கொடூரங்களில் மிகவும் துன்புற்றவர்கள், எனினும் வெற்றிகரமாக எதிர் கொண்டவர்கள்(நமக்கு அந்தப் போராடும் குணம் இல்லையே என்னும் பொறாமை… (மேலும் காண்க)

*Krishanthan Premachandran

'கனடாவிற்குப் பல தடவைகள் அமெரிக்காவில் இருந்து சென்றிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் இலங்கைத் தமிழர்கள். இலங்கைத் தமிழர்கள் 7 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இந்தியத் தமிழர்கள் 13000 பேர் மட்டுமே. என்ன காரணம்? ஏன் இந்த வேறுபாடு?

*தனுஷாந்த், C eng. Cybernetic Engineering & Machine emotion automation, James Cook University (1996)

11 டிச., 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

'பொறாமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், நானும் தமிழ்நாட்டில் பிறந்தவனே. எனினும், இலங்கையில் வாழ்பவனாகவும் இலங்கைத் தமிழனாய் வாழ்ந்த என் பண்பு முதல் ஏனைய இலங்கைத்தமிழர்களின் பண்பையும் என் பாரதத்தமிழர்களுக்கு இணங்காதா என்று ஏங்குபவனாய்க் கூற விரும்புகிறேன்: இலங்கைத் தமிழர்களுக்குத் தெரிந்த மரியாதை தமிழ்நாட்டவருக்கு ஒருபோதும் தெரிய வாய்ப்பில்லை என்று. வயது போனவருக்குக் கிடைக்கும் அதே மரியாதையைத்தான் இலங்கையின் இளைஞர்களுக்கும் கிடைக்கும். இப்படியிருக்கையில், இலங்கைத் தமிழர் வயதுபோனவரை ஒருபோதும் அவமரியாதையுடன் உரையாற்ற மாட்டார்கள். எவரையும் அவமரியாதையுடன் உரையாற்றுவது இலங்கைத்தமிழர்களின் வழக்கத்துக்கு மாறாநது… (மேலும் காண்க)

*Jeyachandran Srini

மகாலிங்கம், இயற்பியல் லிருந்து இயற்பியல் முனைவர்.

2 டிச., 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

'எனக்கு பொறாமை எதுவும் இல்லை.

எங்கிருந்தாலும், அவர்கள் தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் காப்பாற்றி வருகிறார்கள் என்ற பெருமை உள்ளது.

மிகவும் துன்பப்பட்ட நமது இனம் என்ற பரிவு உள்ளது.

*தாட்சயணி மஹாராஜன், தாம்பரம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா-இல் வசிக்கிறார் (1991-தற்போது)

5 டிச., 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

'அப்படி எல்லாம் எனக்கு எந்தப் பொறாமையும் ஏற்பட்டதில்லையே!

இதென்ன இன்னொரு 'வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்' மாதிரியா?

551 பார்வைகள்15 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்

*தனுஷாந்த் [துளசி], தமிழ்-ஐ அறிந்திருக்கிறார்

27 நவ., 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

'உங்களுக்கு ஏற்படும் இது போன்ற உணர்வுகளுக்கு மற்றவர்கள் எப்படிப் பதிலளிக்க முடியும்?

பொதுவாகப் பொறாமை என்கின்ற ஒரு உணர்வு. தன்னிடம் இல்லாத ஒன்றானது, வேறு ஒருவரிடம் இருப்பதைக் கொண்டோ அல்லது இருப்பதாக எண்ணிக்கொள்வதினாலோதான் எழுகின்றது எனலாம்.

454 பார்வைகள்5 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்

*Deak Ashwo

 மூலம் பதில் கோரப்பட்டது

*Ananthasegaram Rajasegaram

*பவித்ரன் கலைச்செல்வன், தமிழ்-ஐ அறிந்திருக்கிறார்

27 நவ., 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

*இதுவரை நான் அவ்வாறு கேள்விபட்டதுகூட இல்லை.. அப்படி ஏற்பட்டால் உங்களுக்கு ஏதேனும் வெறுப்பு மனப்பான்மை இருந்திருக்கலாம்.

==========================================================================

https://ta.quora.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D