எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 2 ஏப்ரல், 2022

அளப்பரிய மோகமும் "அடச்சீஈஈஈய்..." முதுகு வலியும்!!!

'உடலுறவில் ஈடுபடும்போது மூன்றில் ஒரு பங்கு ஆடவர்கள், ஏராள ஈடுபாடு இருந்தும் முதுகு வலி காரணமாக,  அதை ஒத்திப்போடும் பரிதாப நிலைக்கு உள்ளாகிறார்கள்.' 

இது கதையல்ல; அண்மைக் காலத்தில் ஆன்லைனில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு.

ஆய்வு நிகழ்த்திய பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஒன்று, 58% இளைஞர்கள் பாலுறவின்போது ஒரு சில முறைகளேனும் முதுகு வலிக்கோ தசைநார்ப் பிடிப்புக்கோ உள்ளாகிறார்கள் என்கிறது.

இன்றைய இளைஞர்கள், தேவையான படங்களுடன் உடலுறவு முறைகளை விளக்கும் ஆங்கில நூல்களைப் படிக்கிறார்கள்[தமிழில் போதுமான அளவிற்குத் தரமான நூல்கள் இல்லை]; குறுந்தகடுகளைச் சேகரித்துப் பயன்படுத்துகிறார்கள்.

இது தொடர்பான காணொலிகளும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சிறந்தவற்றைத் தேர்வு செய்து கணினியில் பதிவிறக்கம் செய்து பாதுகாக்கிறார்கள். இருந்தும்.....

'அந்த' நேரம் பார்த்து முதுகு வலிக்கு உள்ளாகி மூன்றில் ஒரு பங்கு வாலிபர்கள் துவண்டுவிடுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், பாலுறவு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வதில் காட்டுகிற ஆர்வத்தை உடல் நலத்தைப் பேணுவதில் காட்டுவதில்லை என்பதே.

ஆகவே, பாலுறவில் நாட்டமுடையவர்கள் முறையான உடற்பயிற்சிகளை அன்றாடம் மேற்கொள்வது[தேவைப்பட்டால், 'பிசியோதெரஃபிஸ்டுகள்' என்னும் பயிற்சியாளர்களை அணுகலாம்] மிக அவசியம் என்கிறது மேற்கண்ட மருத்துவ இதழ்.

என்னதான் பயிற்சியில் ஈடுபட்டாலும், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நிலையில் இயங்கும்போது உடலின் ஒரு பகுதியில் வலி தோன்றுமாயின் அந்த நிலைக்கு ஆளாவதை முற்றிலுமாய்ப் புறக்கணிக்கலாம்.

அந்தரங்க உறவில் ஈடுபடும்போது தம்பதியர், அமுங்கும் மெது மெது மெத்தைகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்த்தல் வேண்டும். படுக்கை கடினமான மெத்தையைக் கொண்டதாக இருத்தலே நல்லது.

அரிதாக மூட்டு வலிக்கு உள்ளாக நேர்ந்தால், மூட்டுகளுக்கு அடியில் தலையணை வைத்துக்கொள்ளலாம்['இது' படுத்துற பாடு கொஞ்சநஞ்சமல்ல!]. 

உடலுறவு சிறக்க மேற்கண்ட பரிந்துரைகளை மனதில் ஆழமாகப் பதித்திடுக! உடல்நலம் பேணுக! காமசுகமும் பெறுக!!


==========================================================================உதவி:

'மன்மதக்கலை' -டாக்டர் டி. நாராயண ரெட்டி; சூரியன் பதிப்பகம், சென்னை.