பக்கங்கள்

திங்கள், 4 ஏப்ரல், 2022

மரபணு[DNA] வரிசை இத்தனை நீளமா!!!???

'மரபணு' எனப்படும் Deoxyribonucleic Acid[DNA] குறித்து, ஓரளவுக்கேனும் அறியாதோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருத்தல்கூடும். நம் வம்சாவளியைக் கண்டறிய இது உதவுகிறது என்பது இதன் தலையாய பயன்பாடு.

வேறு எதெதற்கெல்லாம் இது பயன்படுகிறது என்பதற்கான ஒரு சிறு பட்டியலை https://spark.adobe.com/page/PkaU0NvujPKWR/ என்னும் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. மிக்க மகிழ்வுடன் பகிர்கிறேன்.

                                           *   *   *

*நாம் வளர்வது, செயல்படுவது, இனப்பெருக்கம் செய்வது என அனைத்து நிகழ்வுகளும் நம் மரபணுவைப் பொருத்தே அமைகின்றன!

*DNA-வின் உள்ளடக்கமான 'Gene'  நமது அங்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

*ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்ட இரட்டைப் பிறவிகளைத் தவிர அனைவரின் மரபணுக்களும் தனித்துவம் வாய்ந்தவை.

*குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தடயவியல் நிபுணர்கள் மரபணுவைப் பயன்படுத்துகின்றனர்.

*ஒரு மனிதனுக்குள் இருக்கும் மரபணுவை வரிசையில் வைத்தால்...... அது பூமியிலிருந்து சூரியனுக்கு 600 முறை சென்று திரும்பும் அளவுக்கு நீளம்[நம்ப முடியலையே! விஞ்ஞானிகள் பொய் சொல்ல மாட்டார்களே?!]உடையது.

*மனித மரபணுவும், வாழைப்பழ மரபணுவும் 50 % வரை ஒரே மாதிரியானவை.

*மனித மரபணுவும் சிம்பன்ஸி குரங்கின் மரபணுவும் சுமார் 98% ஒரே மாதிரியானவை[மனிதர்களைக் காட்டிலும் இந்தச் சிம்பன்ஸிகள் அதிகம் நம்பத்தகுந்தவைதானே?!]!

==========================================================================