பக்கங்கள்

புதன், 6 ஏப்ரல், 2022

பக்தி வளர்ப்போம்! பட்டினிச் சாவை ஒழிப்போம்!!

2021ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட, உலக நாடுகளின் பட்டினிப் பட்டியலில் இந்தியா 101ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலக நாடுகளில் எந்த அளவுக்குப் 'பட்டினி' இருக்கிறது என்பதை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் இந்தியாவின் தர நிலை பாகிஸ்தான், பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியான, 2021ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101ஆவது 'தரவரிசை'யில் உள்ளது. இதன் பொருள் இந்த 116 நாடுகளில் 15 நாடுகள் மட்டுமே இந்தியாவைவிட மோசமான நிலையில் உள்ளன என்பதாகும்[இந்த உலகப் பட்டினிப் பட்டியல் என்பது ஜெர்மனியைச் சேர்ந்த Welt hunger hilfe மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த Concern Worldwide ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்டுவருகிறது https://www.bbc.com/tamil/india-58934004].

இந்திய மக்களில் 22 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில், உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் 84 பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள் என்பதை இந்தப் பட்டியலுடன் இணைக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

'இந்தியாவின் பிரச்சனை என்பது செல்வம் சரியான முறையில் பங்கீடு செய்யப்படாததே என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

'எந்த மாநிலத்திலும் பட்டினிச் சாவுகள் எதுவும் பதிவாகவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில்,.....நீதிபதிகள், "விழுப்புரத்தில் 5 வயதுச் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அவரின் 'உடற்கூறாய்வு' அறிக்கையில், 'குடலில் உணவு இல்லாததால் பட்டினிச் சாவு' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என எப்படிக் கூற முடியும்? நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளைச் சேகரித்து அவற்றை மத்திய அரசு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்' -இது, 'விகடன்'இல் வெளியான, பட்டினிச் சாவு குறித்ததொரு செய்தி[https://www.vikatan.com/government-and-politics/politics/is-there-no-hungry-death-in-india-supreme-court-questions-central-government  -Published:18 Jan 2022 2 PM]

'செல்வம் சரியான முறையில் பங்கிடப்படாதது[ஜெர்மனி&அயர்லாந்து அறிக்கை], பட்டினிப் பட்டியலில் இந்தியா பின்தங்கியிருப்பதற்கான ஒரு காரணம் மட்டுமே. இந்தப் பின்தங்கிய நிலைக்கு இதைவிடவும் முக்கியக் காரணங்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை.....

இந்து வெறி, இந்தி வெறி, சமஸ்கிருத வெறி, ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளைப் பறித்துத் தன்னிச்சையாய் ஆட்சி நடத்தும் ஆதிக்க வெறி போன்றவை[வறுமையை ஒழிப்பதைவிடவும் மிகப் பல மடங்கு கவனம் இவற்றை வளர்ப்பதில் செலுத்தப்படுகிறது].

இத்தனை வெறிகளின் பிடியிலிருந்து இந்த இந்திய அரசு விடுபடுவது இப்போதைக்குச்  சாத்தியம் இல்லை.

எனினும், இங்கே பட்டினிச் சாவுகள் நிகழாதவாறு தடுத்திட எளிய வழியொன்று உண்டு. அது.....

மத வெறியைப் பரப்பி, இந்துக் கடவுள்கள் மீதான பக்தியை அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். இதைச் செய்தால், இங்குப் பட்டினிப் பட்டியலில் இருப்போர் பட்டினியால் இறப்போர் ஆகாமல் கடவுள்கள் காப்பாற்றுவார்கள்; செத்தொழிந்த அத்தனை பேரும் சொர்க்கம் சேருவார்கள்.

வாழ்க இந்து வெறி! வளர்க இந்தி வெறி!! வெல்க 'இந்து இந்தி' வெறியர்கள்!!!

==========================================================================