ஆலிவ் நிறம் கொண்ட தோலுக்குச் சொந்தக்காரிகள் இத்தாலியக் குமரிகள். உலகப் புகழ் பெற்ற 'சோஃபியா லோரன்', 'மோனிகா பெலூசி' என்னும் நடிகைகள் இந்த நாட்டுக்காரிகள்தான்.
கொலம்பியா அழகிகளின் தோல் தங்கப் பழுப்பு நிறம் கொண்டது. அளவான 'சிக்' உடம்பும், வளர்ந்த கரிய கூந்தலும் கொண்ட இந்தக் கவர்ச்சிக் கன்னிகள்தான், ஒரு காலக்கட்டத்தில் ஹாலிவுட்டில் கடும் புயல் உருவாகக் காரணமானவர்கள் என்கிறது ஹாலிவுட் திரைப்பட வட்டாரம்.
நேர்த்தியான பழுப்பு நிறத் தோலும், அடர்த்தியான கூந்தலும் பெரிய கண்களும் இந்தியப் பெண்களுக்கு அழகு சேர்க்கிறதாம்.
இந்தியாவுக்குள்ளேயும், வடகிழக்கு இந்தியப் பெண்களின் வழுவழுப்பான தோல் ஆலிவ் நிறம் கொண்டது. இவர்களின் கண்கள் பாதாம் வடிவத்தில் உள்ளதாம்.
செப்பு[செம்பு] நிறம் கொண்ட நைஜீரியப் பெண்கள் பாலுணர்வைத் தூண்டும் கவர்ச்சியான உடல்வாகுக்குச் சொந்தக்காரிகள்.
வெளிர் நிறக் கூந்தலும் வெண்ணிற மேனியும் கொண்டவர்கள் ஆஸ்திரேலியாப் பெண்கள். இந்தச் சிங்காரிகளின் சிரிப்புக்கு மயங்காத ஆடவர்களே உலகில் இல்லையாம்.
ஹிஜாப் அல்லது புர்கா அணியும் ஈரான் பெண்களின் ஒளி பொருந்திய கண்கள் ஏனைய நாட்டுப் பெண்களைப் பொறாமையில் வெந்து புழுங்கச் செய்யுமாம்.
உலகிலேயே கவர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் பிரேசில்காரிகள்.
எகிப்து என்றவுடன் கிளியோபாட்ரா நம் நினைவுக்கு வருகிறாள். இவளுக்கு வட்ட முகம், பளபள கன்னங்கள், மது ஊறும் உதடுகள் போன்றவை பெரும் புகழ் சேர்த்தவை.
ஆக, உலகத்திலுள்ள எல்லா நாட்டுப் பெண்களும் அழகிகளே.
"எங்கள் ஊரில்... எங்கள் தெருவில் இப்படியான அழகிகளே இல்லையே" என்று எவரும் நொந்து நூலாக வேண்டாம். கண் மூடிக் கற்பனையில் ஆழ்ந்தும், தடை ஏதுமின்றி விடிய விடியக் கனவுகள் கண்டும் இவர்களுடன் களிநடனம் புரியலாம்! இன்பத்தேரில் உல்லாசப் பவனி வரலாம்!!
கலக்குங்கள்!!!
***தொடக்கம் முதலாக எழுதி முடிக்கும்வரை அழகிகளைத் தவிர எனக்குள் வேறு சிந்தனையே இல்லாமல்போனதால், பதிவுக்கான ஆதார முகவரிTravellers' Digestயைச் சேமித்து வைக்கத் தவறினேன் என்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். ஹி... ஹி... ஹி!!!
நன்றி!