முதலிரவில், புதுப் பெண்டாட்டிக்கு நீண்ட நேர உடலுறவுச் சுகமளித்து அவரை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்கச் செய்வது அவரின் ஆசை.
நண்பர்களிடன் ஆலோசனை கேட்டார்.
அவர்களில் சிலர் 'வயாகரா' பயன்படுத்தும்படிப் பரிந்துரைத்தார்கள்.
நம்ம ஆள் நிறைய வயாகரா மாத்திரைகள் வாங்கிக் கைவசம் வைத்துக்கொண்டு தினமும் பயன்படுத்தினார். பலனும் கிடைத்தது.
புத்தம்புதுப் பெண்டாட்டிக்குப் "போதும்...போதும்"னு கதறுகிற அளவுக்குக் காம சுகத்தை வாரி வழங்கிட ஆசைப்பட்டார் இவர்.
வழக்கத்தைவிடவும் கூடுதலாக 200 மில்லிகிராம் விழுங்கினார். அதற்கான கூடுதல் பலனும் கிடைத்தது. ஆனால், அதன் பின்னர்தான் கூடுதலாக மாத்திரை எடுத்துக்கொண்டதால் விளைந்த விபரீதம் தெரிந்தது.
உடலுறவை முடித்துக்கொண்ட பின்னரும் அவருடை ஆணுறுப்பு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை[ஹி... ஹி... ஹி!!!].
மருத்துவர்களை அணுகினார் அன்பர்.
உறுப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அறுவைச் சிகிச்சை செய்தார்கள் அவர்கள். பலன்?
ஊஹூம்..... கிஞ்சித்தும் பலன் கிட்டவில்லை.
அதிக அளவு வயாகராவை விழுங்கியதால் விஸ்வரூபம் எடுத்த 'அது' இயல்பு நிலைக்குத் திரும்பவே இல்லை!
20 நாட்கள் போல அன்பர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. வெளியே நடமாடவே முடியவில்லை. அறுவை செய்த மருத்துவர்களை அணுகினார். அவர்கள், மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்தும் பலன் இல்லாமல்போகவே, "இனி இது இப்படியேதான் இருக்கும்" என்று கைவிரித்துவிட்டார்கள்.
அப்புறம்.....?
அப்புறம் என்ன, தாலி கட்டிய பெண்டாட்டி[அப்பாவிப் பொண்ணு], "இந்தப் பொல்லாத காமக் கொடூரனோடு வாழ முடியாது"ன்னு சொல்லித் தன் பிறந்தகத்துக்கு ஓட்டம் பிடித்தாள்.
அடடா... அப்புறம்.....?
அன்பரின் படத்துக்குக் கீழே உள்ள ஆங்கில வரிகளை மீண்டும் வாசியுங்கள்!
======================================================================================
ஆதாரம்: 'மாலைமலர்'; zeenews.india.com