'Shahzuma' பகுதியில் உள்ளது மருத்துவர் Dr. SM Ahmad வின் மருத்துவச் சிகிச்சை மையம்[clinic]. அங்கே அவர் இருந்தபோது, ஒரு பெண் குரங்கு தன் குட்டியுடன் வருவதைக் கண்டார். சிறுவர்கள் கொடுத்த தொல்லைகளைச் சமாளித்து அது மருத்துவமனையில் நுழைந்தது.
அதன் வருகையை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் எவருக்கும் எந்தவிதத் தொல்லையும் தராமல், மருத்துவர் சிகிச்சையளிக்கும் அறையிலிருந்த படுக்கை ஒன்றில், குட்டியுடன் தனக்கு உண்டான காயத்தைக் காட்டியவாறு அமர்ந்தது.
அதனுடைய வருகையின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர். காயத்தின் மீது களிம்பு[oinment] தடவினார். குரங்கு அமைதி காத்தது.
காயத்தை ஆராய்ந்த அவர் உரிய முறையில் சிகிச்சையளித்தார். இந்த நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுக் காணொலியாகவும் வெளியிடப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிகழ்வு குறித்து, "வந்து சிகிச்சைப் பெற்றுச் சென்ற குரங்கைப் போல மனிதர்கள்கூட நடந்துகொண்டதில்லை" என்று வியந்து கூறினார் மருத்துவர்https://tatvabodhini.com/whaaatt-monkey-and-its-infant-visit-a-clinic-in-bihar-to-have-their-wounds-treated/.
======================================================================================
***தொடர் பரிணாம வளர்ச்சியின் விளைவாக என்றேனும் ஒரு காலக்கட்டத்தில், குரங்குகள் ஆறறிவு மனிதனை ஆளும் நிலை உருவாகுமோ என்று நினைக்கத் தூண்டுகிறது மேற்கண்ட நிகழ்வு!