புதன், 8 ஜூன், 2022

மணி அடிப்பவனுக்குக் கோயில் சொந்தமா?! இது வரலாறு காணாத அதிசயம்!!!

[வழிபடுவதற்கு வந்த பெண்ணைத் தாக்கிய தீட்சிதன்கள்]

நேற்று[07.06.2022] தமிழ்நாடு அறநிலையத் துறையின் தணிக்கைக்  குழுவினரிடம் கணக்குக் காட்ட மறுத்திருக்கிறார்கள் சிதம்பரம் கோயிலில் மணியடித்துப் பிழைப்பு நடத்தும் தீட்சிதர்கள். 

அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களுள் ஒன்று, "இந்தக் கோயிலை இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்கள் மூதாதையர் வழிபாடு செய்து நிர்வகித்து வருகின்றனர்[கோயில் கட்டுமானப் பணியில் இவர்களின் பங்கு '00000]" என்பது.

2000 ஆண்டுகளாக[ஆண்டுக் கணக்கே தவறானது] இவர்கள் நடராசர் உட்பட அங்குள்ள சாமிகளுக்கும் மணியடித்துப் பூஜை செய்திருக்கலாம். பூஜை செய்பவர்களுக்கு[இயன்ற வழியிலெல்லாம் தமிழை அவமதிக்கும் இவர்களுக்கு இந்த உரிமையை வழங்கியவர்கள் சோழ மன்னர்கள். வீரம் இருந்த அளவுக்கு அவர்களிடம் ஆழ்ந்து சிந்திக்கும் அறிவு இல்லை என்பது அறியத்தக்கதாகும்]க் கோயில் சொந்தமாகிவிடாது. சொந்தம் இல்லாதபோது நிர்வகிக்கும் உரிமையையும் பெற்றிட வாய்ப்பில்லை.

இரண்டாவது காரணமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டுகிறார்கள்.

அப்போதைய தமிழ்நாடு அரசு முனைப்புடன் வாதாடியிருந்தால் அப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டிராது.

முட்டாள் தமிழர்களால் 'புரட்சித் தலைவி' என்று போற்றப்பட்ட அம்மையார்[தன் ஜாதியாருக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில்] ஒரு கற்றுக்குட்டி வழக்குரைஞரை நியமித்ததன் விளைவே இத்தப் பாதகமான தீர்ப்பு[இப்போதும், மத்திய 'பாஜக' அரசு இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது]. 

இங்கே குறிப்பிடத்தக்க மிக முக்கியமானதொரு கேள்வி.....

சிதம்பரம் கோயில் இந்தத் தீட்சிதர்களுக்குச் சொந்தமானதென்றால், கோயிலில் குடிகொண்டிருப்பதாக நம்பப்படும் நடராசரும் இவர்களுக்கே சொந்தம் என்றாகிறது.

அவர் இவர்களுக்கான கடவுள் என்றால்[2000 ஆண்டுகளாக இவர்களின் மூதாதையர் வழிபட்டது என்கிறார்கள்] இவர்கள் மட்டுமே இன்றளவும் வழிபாடு செய்திருக்க வேண்டும். பிறரை அனுமதித்திருக்கக் கூடாது.

பொதுமக்களும் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று வழிபடுவதைத் தவிர்த்திருத்தல் வேண்டும். 

மக்கள் செய்யவில்லை. இனியேனும் அதைச் செய்யலாம்.

இதற்கிடையே, உரிய முறையில் உச்ச நீதிமன்றம்வரை சென்று இந்த வழக்குக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கான வழிவகைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து ஆராய்தல் வேண்டும்.

முனைப்புடன் செயல்பட்டால், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சாதகமான தீர்ப்பைப் பெற்றிட முடியும் என்பது உறுதி.

நல்லதொரு தீர்ப்பு வந்தபிறகு மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடலாம். மக்கள் செல்லவில்லை என்றால் கோயிலுக்கு வருமானம் இல்லை. வருமானம் இல்லையென்றால் தீட்சிதர்கள் கோயிலைச் சீந்தமாட்டார்கள்!

கோயிலுக்குள் சென்று தில்லை நடராசரை வழிபடாமல் இருப்பது இயலாது என்றால், மக்களே களத்தில் இறங்கிப் போராடலாம்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!!!

======================================================================================