அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 7 ஜூன், 2022

'சபல'ப் பெண்களும் 'சரச சல்லாப'ச் சாமியார்களும்!!!

சாமியார் நித்தியானந்தா பற்றி அறியாதார் எவருமில்லை.

பெண்களை, ஒரு கை உயர்த்தி ஆசீர்வதிக்க 5000 ரூபாயும், தலை தடவி ஆசீர்வதிக்க 10000 ரூபாயும், அரவணைத்து ஆசீர்வதிக்க 15000 ரூபாயும் வசூலித்திருக்கிறான் கவர்ச்சியாகப் பேசத் தெரிந்த இந்த வாலிப வயதுப் போலிச் சாமியார்.

இவனின் ஆசிரமத்தில் ஆன்மிகச் சேவை புரிவதாகச் சொல்லி, அங்கேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கில். அவர்களில் பெரும்பாலோர் பதின்பருவக் குமரிகள்.

சாமியார்களின் அந்தரங்க லீலைகள் பற்றித் தெரிந்திருந்தாலும் 'சபல'ப் பெண்கள் அவர்களைத் தேடிப் போவதற்குப் பக்தி தரும் பாதுகாப்பு முக்கியக் காரணம் ஆகும்.

இந்த அளவுக்குப் பெண்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி இந்தக் கபட வேடதாரிக்கு வாய்த்தது எப்படி?

'பல பாலியியல் குற்றங்களைச் செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி, அயல் தேசம் சென்று, 'கைலாசா'வில் மறைந்து வாழும் இந்த  'நித்தியானந்தா', இப்போது நினைவிழந்த நிலையில் உள்ளார். ஏற்கனவே இவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருந்திருக்கிறது. இப்போது சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளன. சிறுநீரகப் பழுதிற்கான காரணம், பாலுணர்வைத் தூண்டும் 'வயாகரா' மத்திரைகளை எடுத்துக்கொண்டதுதான்'[நக்கீரன், ஜூன் 04-07,2022] என்னும் செய்தியில் அதற்கான விடையும் உள்ளது.

ஆம், வயாகராவைப் பயன்படுத்தியதோடு, வேறு பல பாலுறவுச் சாகசங்களையும் கையாண்டு, உடலுறவில் பெண்களைத் தம் வசம் இழக்கச் செய்து, தன் ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கித் தனக்குச் சேவகம் செய்ய வைத்திருக்கிறான் இவன்.

இவனைப் போலவே, பாலியல் குற்றங்கள் பல புரிந்து சட்டத்தின் பிடிக்குள் சிக்காத சாமியார்கள் இப்போதும் இங்கே இருக்கிறார்கள்.

விதம் விதமாய் ஆடம்பர ஆடைகள் உடுத்து, புரியாத தத்துவங்கள் பேசி, ஒட்டுமொத்த உலகத்தையே ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள். நெற்றி, கண்கள், மூக்கு தவிர முகம் முழுக்கத் தாடி[மீசை] வளர்த்த இவர்களை அடையாளம் காண்பது மிக எளிது.

எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும், தம்முடைய குடும்பப் பெண்களுடன் சாமியார்களைத் தரிசிக்கச் செல்வதோ, தனியாக அவர்களை அனுப்புவதோ செய்யவே கூடாத தவறு என்பதைக் குடும்பத் தலைவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக மிக அவசியமாகும்!

காமுகர்களை நம்பலாம். ஏனெனில், அவர்களில் நல்லவர்கள் உண்டு. சாமியார்களில் மிக மிகப் பெரும்பாலோர், குற்றங்கள் பல புரிந்து, தண்டனைகளிலிருந்து தப்பிக்க ஆன்மிக வேடம் புனைந்த அயோக்கியர்கள் ஆவார்கள். அவர்களை நம்பவே கூடாது!

======================================================================================