அண்மைக்கால மருத்துவ ஆராய்ச்சிகள் முலம் ‘வயாகரா’ மாத்திரைகள் அதிகப் பக்க விளைவுகளை உண்டுபண்ணுவது கண்டறியப்பட்டுள்ளது.
அவையாவன:
*ஓரிரு முறை வயாகராவை உபயோகப்படுத்த ஆரம்பித்தால், அதன் பின், தினமும் காபி[coffee]க்காக மனம் ஏங்குவது போல் நாள்தோறும் அதற்காக மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். நிறைய நேரத்தை அது கபளீகரம் செய்துவிடுவதால், மற்றக் கடமைகள் மீது கவனம் செலுத்துவது குறையும்[உருப்பட்ட மாதிரிதான்].
*இந்த மாத்திரையை உட்கொண்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் உடல்நிலை சூடாவது போல ஓர் உணர்வு தோன்றும். கன்னங்களும் முகமும் வீங்கிவிட்டது போன்ற உணர்வும் உண்டாகும்.
*சிறிது கண் எரிச்சல் உண்டாகும். மாத்திரை எடுத்துக்கொண்ட பலருக்கும் தலைவலி கண்டிப்பாக உண்டு. இதில் மாற்றுக்கருத்து இல்லை.
*இந்தத் தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காக, மேலும் ஒன்றோ பலவோ மாத்திரைகளை விழுங்குவது தவிர்க்க இயலாதது.
*அல்சர் இருப்பவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் ஆரம்பித்துவிடும். தொடர்ச்சியாக ஒரு வாரம் வயாகராவைப் பயன்படுத்தினாலோ தீராத நெஞ்சு எரிச்சல் உண்டாக அது வழிவகுக்கும்.
*சிறுநீரின் நிறம் மஞ்சளாகவும், ரத்தம் கலந்தது போலவும் மாறித் திகிலூட்டும்.
*வயாகரா பயன்படுத்தினால், அடுத்த நாள் எடுத்துக்கொள்ள தலைவலி மாத்திரையை இருப்பில் வைத்திருப்பது கட்டாயம். 'வயாகரா முன்னே, தலைவலி பின்னே’ என்பதை வயாகரா அடிமைகள் மறந்துவிடுதல் கூடாது.
*இதுவும் ஒருவகையில் ‘துரித உணவு’[ஃபாஸ்ட் ஃபுட்] போன்றதுதான். பழகிவிட்டால் வெறுத்தொதுக்குவது என்பது அத்தனை எளிதல்ல.
*கரோனரி தமனி நோய் இருந்தால், மாரடைப்பு அபாயம் உள்ளது. மூச்சுக் குழாய் அழற்சி, ஆஸ்துமா அதிகரிப்பு, இருமல் போன்றவற்றிற்கும் வயாகரா பயன்பாடு காரணமாக அமையலாம்.
*வயாகரா வளரும் கருவைச் சேதப்படுத்தும்.
*தசைக்கூட்டு அமைப்பு எலும்புகள் மற்றும் மூட்டுகளில் புண், கீல்வாதம் போன்ற பாதிப்புகளும் உருவாகலாம்.
*இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்வது செவித்திறனைச் சேதப்படுத்தும்.
*செரிமானப் பிரச்சினைகள், உறுப்புகள் சிவந்துபோதல், தற்காலிகமான பார்வைக் கோளாறு, மூக்கடைப்பு, முதுகு வலி, தசை வலி, தலைச் சுற்றல், குமட்டல், உடல் அரிப்பு போன்ற தற்காலிக & சாதாரணப் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
*தேவைக்கு மேல் பயன்படுத்தினால், விறைத்த ஆண்குறி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் போகலாம். இதற்குச் சிகிச்சையும் இல்லை. வெளியே போனால் சந்தி சிரிக்கும்.
***வயாகரா பயன்பாடு குறித்து, பிரபல பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியின் கருத்து:
‘‘இது நம் ஆண்களின் சோம்பேறித்தனத்தைத்தான் காட்டுகிறது. பெண்களின் பாலுணர்வு இயங்கும் விதமே வேறு. ஆண்கள் வெறும் பார்வையாலேயே கிளர்ச்சி அடைந்துவிடக் கூடியவர்கள். பெண்கள் அப்படியல்ல. அவர்களின் மனசு நிறைய வேண்டும். ஓர் ஆண் பெண்ணுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும்.....
அவள் ரசிக்கும்படி பேச வேண்டும். இப்படி நிறைய இருக்கிறது. ஒரு நல்ல தாம்பத்தியத்துக்கு மனப்பூர்வமான முன் விளையாட்டுகள் தேவை. அவைதான் பெண்ணைக் கிளர்ச்சிகொள்ளச் செய்யுமே தவிர, இப்படிப்பட்ட கெமிக்கல் கலவையாலான மாத்திரைகள் அல்ல. எந்த மருந்தும் வெளிவரக் கூடாதென்று மருத்துவர்கள் நாங்கள் சொல்வதில்லை. வரட்டும். ஆனால், அது முழுமையான சோதனைகளைத் தாண்டி, பக்க விளைவுகள் இல்லாத விதத்தில் வந்துசேர வேண்டும்!.’’
பெண்களுக்கான ‘வயாகரா’ பற்றி, ‘‘என்னதான் மூளையில் வினை புரிவதாக இருந்தாலும் பெண்ணின் உணர்ச்சிகளைச் சம்பந்தமே இல்லாத ஓர் ஆணின் பக்கம் இழுக்க எந்த மாத்திரையாலும் முடியாது. அறியாமையால் அப்படிப்பட்ட முயற்சிகள் இந்த மாத்திரை மூலம் நடக்கலாமே தவிர, அது வெற்றி பெற வாய்ப்பில்லை!’’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார் அவர்.
ஆகையினால், வெட்கப்படாமல் நாராயண ரெட்டி போன்ற உண்மையான பாலியல் மருத்தவர்களிடம் ஆலோசனை பெறுவதோடு, இதற்கெனப் பரிந்துரைக்கப்படும் பயிற்சிகளை முறையாகச் செய்வதன் மூலம் உடலுறவுக்கான நேரத்தை நீட்டிக்கலாம். அனைத்திற்கும் மேலாக, ஆண், பெண் என்னும் இருபாலரும், “இது போதும்” என்னும் மனப் பக்குவத்தைப் பெறுவது மிக முக்கியம் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.
=====================================================================================
http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=9337&id1=4&issue=20150921
மேற்கண்டவை போன்ற வேறு வேறான தளங்களிலிருந்து திரட்டப்பட்டவை இப்பதிவுக்கான தகவல்கள்.
====================================================================================